ETV Bharat / state

தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கல் தொடக்கம்

தமிழ்நாடு முழுவதும் உள்ள நியாயவிலைக் கடைகளில் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்குவதை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோகம் தொடங்கியது!

author img

By

Published : Jan 9, 2023, 10:13 AM IST

Updated : Jan 9, 2023, 10:23 AM IST

தமிழ்நாடு முழுவதும் உள்ள நியாயவிலைக் கடைகளில் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்குவதை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: தமிழ்நாடு அரசு சார்பில் பொங்கல் பரிசுத்தொகுப்பு நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்கப்பட்டுவருகிறது. அந்த வகையில், ரூ.1,000 ரொக்கத்துடன் ஒரு கிலோ பச்சரிசி மற்றும் ஒரு கிலோ சர்க்கரை ஆகியவை பொங்கல் பரிசுத்தொகுப்பாக வழங்கப்படும் என்று கடந்த டிச.22ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இந்த தொகுப்பில் கரும்பு இடம் பெறாதது, கரும்பு விவசாயிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. தமிழ்நாடு முழுவதும் உள்ள கரும்பு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தமிழ்நாடு அரசு, பொங்கல் தொகுப்புடன் ஒரு முழுக் கரும்பும் வழங்கப்படும் என்று டிச.28ஆம் தேதி அறிவித்தது.

இதன் அடிப்படையில் கரும்பு விவசாயிகளிடம் இருந்து கரும்பு கொள்முதல் செய்யப்பட்டது. தொடர்ந்து ஜன.3ஆம் தேதி முதல் ஜன.8ஆம் தேதி வரை பரிசுத்தொகுப்புக்கான டோக்கன்கள் நியாயவிலைக் கடை ஊழியர்களால் வீடு வீடாகச் சென்று விநியோகம் செய்யப்பட்டன.

சென்னை தீவுத்திடல் அன்னை சத்யா நகரில், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வேட்டி, சேலை, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு மற்றும் ரூ.1000 ரொக்கம் ஆகிய பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் நிகழ்வை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி இன்று (ஜன.9)வைத்தார்.

இதனையடுத்து தமிழ்நாடு முழுவதும் உள்ள நியாயவிலைக் கடைகளில் பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோகம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த தொகுப்பு ஜன.13 வரை வழங்கப்படும் எனவும், விடுபட்ட அட்டைதாரர்களுக்கு பொங்கலுக்கு பிறகும் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பொங்கல் பரிசுத் தொகுப்பு எப்படி வழங்கப்பட வேண்டும்.. அரசின் முக்கிய அறிவுரைகள்..

Last Updated : Jan 9, 2023, 10:23 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.