ETV Bharat / state

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: காங்கிரஸ் கட்சி சார்பாக விருப்ப மனு விநியோகம் - காங்கிரஸ் கட்சி சார்பாக விருப்ப மனு விநியோகம்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பம் உள்ளவர்களுக்கு விருப்ப மனு இன்று முதல் காங்கிரஸ் கட்சித் தலைமை அலுவலகத்தில் வழங்கப்பட்டு வருகிறது.

காங்கிரஸ் கட்சி சார்பாக விருப்ப மனு விநியோகம்

author img

By

Published : Dec 1, 2021, 10:55 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் மாநகராட்சி, பேரூராட்சி, நகராட்சி ஆகியப் பகுதிகளில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலைச் சந்திக்க அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன.

இந்தநிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பம் உள்ளவர்களுக்கு விருப்ப மனு இன்று முதல் காங்கிரஸ் கட்சித் தலைமை அலுவலகத்தில் வழங்கப்பட்டு வருகிறது.

காங்கிரஸ் கட்சி சார்பாக விருப்ப மனு விநியோகம்
காங்கிரஸ் கட்சி சார்பாக விருப்ப மனு விநியோகம்

அந்தவகையில், காங்கிரஸ் சார்பில் சென்னையில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களுக்கு விருப்ப மனு காங்கிரஸ் கட்சித் தலைமை அலுவலகத்தில் (சத்தியமூர்த்தி பவனில் ) வழங்கப்பட்டு வருகிறது.

சென்னையில் காங்கிரஸ் கட்சிக்கு வட சென்னை கிழக்கு, வட சென்னை மேற்கு, தென் சென்னை கிழக்கு, தென் சென்னை மேற்கு, சென்னை கிழக்கு, சென்னை மேற்கு, தென் சென்னை மத்திய மாவட்டம் என மொத்தம் 7 மாவட்டமாக நிர்வாக அமைப்பு உள்ளது.

காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட விருப்பமுள்ளவர்கள் படிவத்தைப் பெற்று, அதனை நிரப்பி அந்தந்த மாவட்ட தலைவர்கள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்களிடம் விருப்ப மனுக்களைக் கொடுக்க வேண்டும்.

இதில் ஒரு வேட்பாளர் விருப்ப மனுவுக்கு பொது வார்டு ஆண்கள் என்றால் 1000 ரூபாயும், பெண்களுக்கு 500 ரூபாயும், எஸ்சி\எஸ்டி (SC \ ST) தனி வார்டு என்றால் 500 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. காங்கிரஸ் கட்சி சார்பாகப் போட்டியிடுவதற்கு ஆர்வத்துடன் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் விருப்ப மனுவை அளித்து வருகின்றனர். இன்று மட்டும் 1530 விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி சார்பாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வர வேண்டும்: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.