தமிழ்நாடு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை முதன்மைச் செயலர் தயானந்த் கட்டாரியா அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த அரசாணையில், "ரேஷன் கடைகளில் பருப்பு, பாமாயில் ஆகியவை கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் முதல் 2020ஆம் ஆண்டு பிப்ரவரி வரை பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வந்தது. தற்போது அந்த திட்டத்தை மேலும் ஒரு ஆண்டிற்கு நீட்டிப்பு செய்து (2020 மார்ச் - 2021 பிப்ரவரி) தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது" என்று குறிப்பிட்டிருந்தார்.
மேலும், "இதன் மூலம் தேவையான குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவதோடு, வெளிச்சந்தைகளில் பருப்பு மற்றும் எண்ணெய் விலை உயர்வு கட்டுப்படுத்தப்படும்" என்றும் அந்த அரசாணையில் கூறியிருந்தார்.
இதையும் படிங்க:
ஜோதிராதித்யா சிந்தியாவுடன் நல்லுறவு தொடர்கிறது - திக் விஜய் சிங்!