சென்னை: சமீப காலமாக தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்து கழக ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களில் சிலர் பணியின் பொழுது மது போதையில் இருப்பதாக புகார் பெறப்படுகிறது. மது அருந்திய நிலையில் பணிபுரிவது சட்டப்படி குற்றமாகும். மது அருந்திய நிலையில் பணிபுரிவதால் பயணிகளிடையே நிர்வாகத்திற்கு அவப்பெயர் ஏற்படுவதுடன் அவர்கள் பேருந்துகளில் பயணிப்பதை தவிர்க்க வாய்ப்புள்ளது.
எனவே, அனைத்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் பணியின் பொழுது மது அருந்திய நிலையில் பணி புரியக்கூடாது. அவ்வாறு பணியின் பொழுது மது அருந்திய நிலையில் பணிபுரிவது கண்டறியப்பட்டால் காவல் துறை மூலம் நடவடிக்கை எடுக்க வாய்ப்பு மிக அதிக அளவில் உள்ளது.
மிக கடுமையான ஒழுங்கு நடவடிக்கை (அடிப்படை சம்பளம் குறைப்பு, பணி நீக்கம்) எடுக்கப்படும். எனவே, பணியாளர்கள் மேற்படி குற்றத்திற்கான பின் விளைவுகளை அறிந்து பணியில் ஒழுங்கீனத்திற்கு இடம் கொடுக்காமல் பணிபுரிய அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று அரசு விரைவு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:நீர் மேலாண்மை இயக்கம்...தமிழகத்திற்கு விருது...முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து