ETV Bharat / state

கவுரவ விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பித்த மாற்றுத்திறனாளிகள் போராட்டம்!

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள கவுரவ விரிவுரையாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பித்த மாற்றுத்திறனாளிகள் விதிகளை முறையாக பின்பற்றவில்லை என குற்றம்சாட்டி கல்லூரி கல்வி இயக்குநர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கௌரவ விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பித்த மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

author img

By

Published : Jan 3, 2023, 3:37 PM IST

கவுரவ விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பித்த மாற்றுத்திறனாளிகள் போராட்டம்!

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 1895 கவுரவ விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்தப் பணியிடங்களுக்கு 9,915 நபர்கள் விண்ணப்பித்தனர். அவர்களில் இன்று மாற்றுத்திறனாளிகளுக்கான மதிப்பெண் தரவரிசை அடிப்படையில் கலந்தாய்வு நடைபெறுகிறது.

மேலும் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுகிறது. இதற்காக தமிழ்நாடு முழுவதும் 385 பேர் தகுதி பெற்று இருக்கின்றனர்.

இந்நிலையில் சைதாப்பேட்டையில் 70க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டனர். ஆனால், பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிமுறைகளைப் பின்பற்றி சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறவில்லை எனக்கூறி கவுரவ விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பித்த மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து அரியலூர் மாவட்டத்தைச் சார்ந்த மாற்றுத்திறனாளி அன்புச்செல்வன் கூறும்போது, 'பல்கலைக்கழக மானிய குழுவின் விதிமுறைகளை முறையாக பின்பற்றி நேர்முகத் தேர்வு நடைபெறவில்லை. பிஹெச்.டி மற்றும் நெட் தேர்வினை முடித்தவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படுகிறது. மற்றவர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். மாற்றுத்திறனாளிகளுக்கான விதிமுறைப்படி இட ஒதுக்கீடு வழங்கி கவுரவ பணிக்கான விரிவுரையாளர் பணியிடம் அனுமதிக்க வேண்டும்.

தனியார் கல்லூரியிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு பணி வழங்க மறுக்கின்றனர். எனவே, அரசு கல்லூரியில் அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் பணி வழங்க வேண்டும்' எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பொங்கல் பரிசு: இன்று முதல் டோக்கன் விநியோகம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.