ETV Bharat / state

ஆர்டிஇ கட்டணத்தை தராவிட்டால் 27ம் தேதி போராட்டம்: தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு முடிவு - dmk

அனைவருக்கும் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்திற்கான கட்டணத்தை தராவிட்டால் வரும் 27-ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

தனியார் பள்ளி இயக்குனரகம்
தனியார் பள்ளி இயக்குனரகம்
author img

By

Published : Feb 6, 2023, 7:16 PM IST

Updated : Feb 6, 2023, 7:26 PM IST

ஆர்டிஇ கட்டணத்தை தராவிட்டால் 27ம் தேதி போராட்டம்: தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு முடிவு

சென்னை: தமிழ்நாடு நர்சரி & பிரைமரி மெட்ரிக்குலேசன் மேல்நிலை, சிபிஎஸ்இ பள்ளிகள் கூட்டமைப்பின் மாநிலப் பொதுச் செயலாளர் நந்தகுமார் கூறும்போது, "தமிழ்நாட்டில் இயங்கி வரும் சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட சிறுபான்மையற்ற தனியார் நர்சரி & பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிகளில், அனைவருக்கும் இலவச கட்டாய கல்வி சட்டப்படி மத்திய, மாநில அரசு விதிப்படி அரசால் தேர்வு செய்யப்பட்ட 25 சதவீதம் மாணவர்கள் சுமார் 1,60,000 பேர் தனியார் பள்ளிகளில் படித்து வருகின்றனர்.

அவர்களுக்கு மத்திய, மாநில அரசுகளால் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச கல்வி கட்டணம் 2021 - 2022 மற்றும் 2023ஆம் கல்வி ஆண்டிற்குரிய கல்வி கட்டண பாக்கி மாநில அரசால் இன்னும் வழங்கப்படவில்லை. அதனால் தனியார் பள்ளி நிர்வாகிகள் ஆசிரியர்களுக்கு சம்பளம் தர முடியாமல், உயர்த்தப்பட்ட சொத்து வரி, மின் கட்டணம், தொழில் வரி, பள்ளி வாகனங்களுக்கான சாலை வரி, இருக்கை வரி, இன்சூரன்ஸ் கட்ட முடியாமல் பள்ளி வாளகங்களை எப்.சி செய்ய முடியாமல், வாங்கிய கடனுக்கு வட்டியும், தவணையும் செலுத்த முடியாமல் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர்.

எனவே, உடனடியாக தனியார் பள்ளிகளுக்கு அனைவருக்கும் இலவச கட்டாய கல்வி சட்டப்படி 25 சதவீதம் மாணவர்களை சேர்த்து கல்வி கற்பித்த வகையில் அரசு தரவேண்டிய இரண்டு ஆண்டுகளுக்கான நிலுவைத் தொகையை உடனே வழங்கிட வேண்டும். ஒவ்வாெரு ஆண்டும் நீதிமன்றத்தில் வழக்காடி, போராட்டங்கள் நடத்தித்தான் கல்வி கட்டண பாக்கியை அரசிடயிருந்து பெற வேண்டும் என்ற நிலைக்கு தயவு செய்து தள்ளி விட வேண்டாம்.

கடந்த ஆண்டு உயர் நீதிமன்றத்தில் வழக்கு போட்டு வழங்கப்பட்ட தீர்ப்பின்படி ஒவ்வொரு ஆண்டும் மூன்று தவணைகளாக தர வேண்டும் என்கிற தீரப்பையும், தாங்கள் கவனத்தில் கொள்ளவில்லை என்பதையும், சென்றாண்டு அரசு ஒதுக்கி ஆணையிட்ட கட்டணத்தில் 25 சதவீதம் குறைத்து தந்ததையும், பள்ளி நிவாரணங்கள் மிகுந்த மனவேதனையோடு அன்றைக்கு இருந்த பொருளாதார கஷ்டத்தின் காரணமாக ஏற்றுக் கொண்டனர்.

அரசு ஒதுக்கிய நிதியில் பெரும் தொகையை திரும்ப பெற்றதையும் வருத்தத்தோடு சுட்டிக் காட்டுகின்றனர். இந்த கல்வி ஆண்டே முடியும் தருவாயில் இன்னும் ஆர்டிஇ நிலுவை கட்டணம் குறித்து எந்த தொகையும் ஒதுக்காமல், அரசாணையும் வெளியிடாத நிலையில் மாவட்ட கல்வி அலுவலர்கள் தாங்கள் நடத்தும் கூட்டங்களில் பள்ளி நிர்வாகிகளை மிரட்டும் தொனியில் கரோனா காலத்தில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் இருந்தால் தான் ஆர்டிஇ கட்டணம் வழங்குவோம் என்றும்; எனவே உடனே கல்வி கட்டணத்தை நிர்ணயம் செய்யுங்கள் என்றும், தொடர் அங்கீகாரம் இருந்தால்தான் கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்படும் என்றும் அச்ச மூட்டுகின்றனர்.

விண்ணப்பித்து காத்திருக்கக் கூடிய பல்லாயிரக்கணக்கானோருக்கு தொடர் தற்காலிக அங்கீகாரம் வழங்காமல் இருப்பதும், கல்விக் கட்டணம் நிர்ணயிக்காமலும் இருக்கின்றனர். இலவச கட்டாயக்கல்வி உரிமை கட்டணங்களை உடனடியாக தராவிட்டால், அனைத்து தனியார் பள்ளி நிர்வாகிகளும் 27-ம் தேதி திங்கள் கிழமை காலை 10 மணிக்கு தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்" எனக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: ராகுல் காந்தி தலைமையில் மீண்டும் நல்லாட்சி வரும்: கே.வி.தங்கபாலு

Last Updated : Feb 6, 2023, 7:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.