ETV Bharat / state

‘தேவர் மகன் குறித்து மாரி செல்வராஜ் பேச்சு’ - கமல் ரசிகர்கள் கண்டனம்! - cinema news

மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் போன்ற பல்வேறு திரைப்பட நடிகர்கள் பங்குபெற்றிருந்த நிலையில் இயக்குநர் மாரி செல்வராஜ் ‘தேவர் மகன்’ படம் குறித்து பேசியது தற்போது பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

தேவர் மகன் குறித்து மாரி செல்வராஜின் பேச்சு

author img

By

Published : Jun 21, 2023, 3:28 PM IST

சென்னை: மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள படம் ‘மாமன்னன்’. இப்படத்தில் வைகைபுயல் வடிவேலு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா, சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் கமல்ஹாசன் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடதக்கது. அப்போது பேசிய இயக்குநர் மாரி செல்வராஜ், “கமல்ஹாசன் நடித்த தேவர் மகன் படத்தை காட்டமாக விமர்சித்து பேசினார்.

அந்த நிகழ்ச்சி சமீபத்தில் பிரபல தொலைகாட்சியில் ஒளிபரப்பானது‌. அதனைப் பார்த்த கமல் ரசிகர்கள் மாரி செல்வராஜின் தேவர் மகன் திரைப்படத்திற்கு தெரிவித்த கருத்துகளை கண்டித்து டிவிட்டரில் #TamilsPrideThevarMagan என்ற ஹேஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற சர்ச்சைக்குள்ளான திரைப்படங்களை இயக்கிய மாரி செல்வராஜின் பட வரிசையில் தற்போது மாமன்னன் படம் இணைந்துள்ளது. இவரின் படங்களில் சாதிய ஒடுக்குமுறைகள் இயல்பான நிலையில் அதிகளவிலும் ஆழமாகவும் பேசப்பட்டு இருக்கும். அப்படி ஒரு படமாக தான் மாமன்னனும் இருக்கும் என ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேசப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில், மாரி செல்வராஜ் தேவர் மகன் படத்தை விமர்சித்து பேசிய பேச்சு, தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி உள்ளது.

இசை வெளியீட்டு விழாவில் அவர் பேசியதாவது, “மாமன்னன் உருவாவதற்கு தேவர் மகனும் ஒரு காரணம். தேவர் மகன் பார்க்கும் போது எனக்கு ஏற்பட்ட வலி, விளைவுகள், அதிர்வுகள், பாசிடிவ், நெகடிவ் என அனைத்து விதமான உணர்வுகள் எல்லாமே இருந்தது. ஒரு சினிமா, சமூகத்தின் பிரதிபலிப்பினை எப்படி புரட்டி போடுகிறது என ஒரு பக்கமும் மற்றொரு பக்கமாக திரை மொழியாக வேற ஒரு கட்டத்துக்கு எடுத்து செல்கிறது. இந்த மற்றொரு பக்க பிரதிபலிப்பு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இவை இரண்டுக்குள்ளும் பின்னிப் பிணைந்து சரியா, தப்பா என்று தெரியாமல் நான் சிக்கித் தவித்தேன்.

தேவர் மகன் ஒரு மாஸ்டர் ஸ்ட்ரோக், எல்லா இயக்குநர்களும் அதை பார்த்துட்டு படம் எடுப்பார்கள். நானும் அப்படித்தான். ஆனால் தேவர் மகன் எனக்கு ஒரு பெரிய மனப்பிறழ்வை உண்டாக்கிய படம். அந்த கால கட்டங்களில் நடப்பதெல்லாம், ரத்தமும், சதையுமாய் இருந்தது. இந்த படம் சரியா தப்பானு தெரியாம அப்படியொரு வலி இருந்தது. ஆனால், இந்த தேவர் மகன் உலகத்துக்குள்ள பெரிய தேவர் இருக்கிறார், சின்னத்தேவர் இருக்கிறார், எல்லாரும் இருக்காங்க. இதுக்குள்ள எங்க அப்பா இருந்தா எப்படி இருப்பாரு, அப்படின்னு முடிவு பண்ணி, எங்க அப்பாவுக்காக பண்ணிய படம் தான் மாமன்னன்.

கமல்ஹாசன் உருவாக்கிய அப்படம் இத்தனை காலங்கள் தாண்டியும், திரைக்கதையோட மாஸ்டர் பீஸ் ஆக இருக்கிறது. நான் கர்ணன் பண்ணும் போதும் தேவர் மகன் பார்த்துட்டு தான் பண்ணேன், பரியேறும் பெருமாள் பண்ணும்போதும் தேவர் மகன் பார்த்துட்டு தான் பண்ணேன். மாமன்னன் பண்ணும்போதும் தேவர் மகன் படத்த பார்த்துட்டு தான் பண்ணேன். ஏன்னா, தேவர் மகனில் வடிவேலு பண்ணிய இசக்கி கதாபாத்திரம் தான் மாமன்னன். அந்த இசக்கி மாமன்னனா மாறினால் எப்படி இருக்கும் என்பது தான் மாமன்னன் படம்” என்று மாமன்னன் உருவான கதையைப் பேசி இருந்தார்.

கமல்ஹாசன் முன்னிலையில் அவர் எடுத்த தேவர் மகன் படத்தை மாரி செல்வராஜ் விமர்சித்து பேசியது அங்கு வந்திருந்த பிரபலங்களுக்கு சற்று அதிர்ச்சியாகவே இருந்தது. மாரி செல்வராஜின் இந்த பேச்சுக்கு ஒரு புறம் பாராட்டுக்கள் கிடைத்தாலும், மறுபுறம் அவரை நெட்டிசன்கள் கடுமையாக ட்ரோல் செய்து வருகின்றனர். மாரி செல்வராஜ் கமல்ஹாசனை விமர்சிப்பது இது முதல்முறையல்ல, இதற்கு முன்னும் இதுபோன்ற சம்பவம் அரங்கேறி இருக்கிறது. அப்படி கடந்த சில வருஷங்களுக்கு முன்பாக கமல்ஹாசனுக்கு மாரி செல்வராஜ் எழுதிய காட்டமான கடிதமும் இப்போது வைரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: Leo Promo single: 'நா ரெடிதான் வரவா..' வெளியானது 'லியோ' ப்ரோமோ பாடல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.