ETV Bharat / state

'தமிழ்நாடு-புதுச்சேரி ஆளுநர்களைப் போல தமிழிசை இருக்கக் கூடாது' - இயக்குநர் கௌதமன் - BJP

சென்னை: தமிழ்நாடு-புதுச்சேரி ஆளுநர்களைப் போல இல்லாமல் தெலங்கானா மண்ணுக்கும் மக்களுக்கும் என்ன நல்லது செய்ய முடியுமோ அதனை தமிழிசை சௌந்தரராஜன் செய்ய வேண்டும் என்று இயக்குநர் கௌதமன் வலியுறுத்தியிருக்கிறார்.

Director gowthaman
author img

By

Published : Sep 4, 2019, 1:13 PM IST

சென்னை விமான நிலையத்தில் இயக்குனர் கௌதமன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்துவந்த தமிழிசை சௌந்தரராஜன் தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும், அவருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாகவும் கூறினார்.

தூத்துக்குடி மக்களவை தொகுதியில் தோல்வியடைந்த பிறகு நிர்மலா சீதாராமனைப் போல மாநிலங்களவை உறுப்பினராக தமிழிசையை தேர்வு செய்து மத்திய அமைச்சர் பதவி கொடுப்பார்கள் என்று மக்கள் எதிர்பார்த்தார்கள், அப்படி செய்திருந்தால் இன்னும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும் என்றார். ஆளுநர் பதவியில் நேர்மையாகவும், தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்க்கக் கூடிய வகையிலும் தமிழிசை நடந்து கொண்டால் கூடுதல் மகிழ்ச்சியாக இருக்கும் எனவும் கௌதமன் கூறினார்.

இயக்குநர் கௌதமன் செய்தியாளர் சந்திப்பு

புதுச்சேரியை கதறச் செய்யும் கிரண்பேடியைப் போலவும், தமிழ்நாட்டில் கத்திக் கதறி ஒப்பாரி வைத்து ஏழு பேர் விடுதலைக்காக இன்னும் கூப்பாடு போட்டுக் கொண்டிருக்கும் நிலையில் கூட, அதைக் கண்டுகொள்ளாமல் இருக்கும் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தைப் போலவும் இல்லாமல் நல்ல முறையில் பணியை தொடர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். மேலும், தெலங்கானா மண்ணுக்கும் மக்களுக்கும் என்னவெல்லாம் நல்லது செய்ய முடியுமோ அதனை தமிழிசை செய்ய வேண்டும் என்றும் தமிழ்நாட்டு மக்களுக்கு மரியாதையை வாங்கிக் கொடுத்தால் அதுவே பெரும் மகிழ்ச்சியாக இருக்கும் எனவும் கௌதமன் தெரிவித்தார்.

Intro:சென்னை விமான நிலையத்தில் இயக்குனர் கௌதமன் பேட்டி:-
Body:சென்னை விமான நிலையத்தில் இயக்குனர் கௌதமன் பேட்டி:-

தமிழக பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெலுங்கானா மாநில கவர்னராக பதவி ஏற்க்க இருக்கிறார், உண்மையில் நாங்கள் மகிழ்ச்சி அடைகின்றோம் மனம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றேன்....

அதே நேரத்தில் நாங்கள் எல்லாம் எதிர்பார்த்த ஒன்றுதான் தூத்துக்குடியில் தோற்றதற்கு பிறகு தமிழ்நாட்டில் மிகப்பெரிய அளவில் பல விதமான விமர்சனங்களையும் தாண்டி வந்த சூழலில் அவர்கள் தோல்விக்கு பிறகு நிர்மலா சீதாராமனை போல ராஜசபா எம்பி ஆக்கி பாஜகவில் கேபினட் அமைச்சர் பதவி கொடுப்பார்கள் என்று தமிழகம் எதிர்பார்த்தது அப்படி செய்திருந்தால் இன்னும் மகிழ்ச்சியாக இருக்கும்

ஆனாலும்கூட கவர்னர் பதவி என்பது கிடைத்துள்ளது இந்த பதவியை நேர்மையாகவும் தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்க்கக் கூடிய வகையில் நடந்து
கொண்டால் இன்னும் இன்னும் கூடுதல் மகிழ்ச்சியாக இருக்கும்..

பாண்டிச்சேரியயே கதர் அடிக்கின்ற கிரன்பேடியை போல இல்லாமல், தமிழ்நாட்டில் கத்தி கதறி ஒப்பாரி விட்டு 7 பேர் விடுதலைக்காக இன்னும் கூப்பாடு போட்டுக் கொண்டிருக்கும் நிலையில் கூட அதை கண்டுக்காமல் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவரைப் போல் இல்லாமல் தெலுங்கானா மக்களுக்கும் சந்திரசேகரராவ் அவர்களுக்கும், தெலுங்கானா மண்ணுக்கும் மக்களுக்கும் என்ன என்னவெல்லாம் நல்லது செய்ய முடியுமோ அதனை தமிழிசை அவர்கள் செய்ய வேண்டும். தமிழ்நாட்டு மக்களுக்கும் மரியாதையை வாங்கி கொடுத்தால் அதுவே பெரும் மகிழ்ச்சி மீண்டும் எங்களுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறினார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.