சென்னை: தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வெழுத உள்ள மாணவர்கள் தங்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டினை இன்று மதியம் 2 மணிமுதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அரசுத் தேர்வுத் துறை அறிவித்துள்ளது.
இது குறித்து, அரசு தேர்வுத் துறை இயக்குநர் உஷாராணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு படிக்கும் மாணவர்களுக்கு செப்டம்பர் மாதம் தேர்வு நடைபெற உள்ளது. முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு செப்டம்பர் 3 முதல் 22ஆம் தேதி வரையிலும், இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு செப்டம்பர் 1 முதல் 21ஆம் தேதி வரையிலும் தேர்வு நடைபெற உள்ளன.
இந்தத் தேர்விற்கு விண்ணப்பித்து இருக்கும் தனித்தேர்வர்கள் அனைவரும் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களுடைய விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றைப் பதிவுசெய்து ஆகஸ்ட் 25ஆம் தேதி மதியம் 2 மணிமுதல் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆசிரியர் தகுதி சான்றிதழ் குறித்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு