ETV Bharat / state

எதிர்க்கட்சி பிளவுபட்டு உள்ளது; காங்கிரஸ் கட்சியின் வெற்றி பிரகாசமாக உள்ளது - தினேஷ் குண்டுராவ் - காங்கிரஸ்

’ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எதிர்க்கட்சி பிளவுபட்டு உள்ளது. எனவே காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது’ என தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார்.

எதிர் கட்சி பிளவுபட்டு உள்ளது எனவே காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது - தினேஷ் குண்டுராவ்

author img

By

Published : Jan 22, 2023, 6:57 PM IST

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக காங்கிரஸ் வேட்பாளரை தேர்வு செய்வதற்கான நேர்காணல் சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தலைமையில் நடைபெற்றது.

இந்த நேர்காணலில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் இளைய மகன் சஞ்சய் சம்பத் மற்றும் ஈரோடு மாவட்ட காங். தலைவர் மக்கள் ஜி.ராஜன் ஆகியோர் போட்டியிட விருப்பம் தெரிவித்தனர். நேர்காணலை தொடர்ந்து தினேஷ் குண்டு ராவ் தலைமையில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உள்ளிட முன்னாள் காங்கிரஸ் மாநில நிர்வாகிகள், ஆரணி எம்.பி. விஷ்ணு பிரசாத், வேளச்சேரி எம்.எல்.ஏ அசல் மவுலான உள்ளிட்டோர் உடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

நேர்காணல் முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் இளைய மகன் சஞ்சய் சம்பத், "ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட நான் விரும்புகிறேன். அதை தினேஷ் குண்டு ராவ் இடம் தெரிவித்துள்ளேன். மேலிடம் தான் அதை முடிவு செய்யும்" எனத்தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ், "ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் தேர்வு குறித்து நேர்காணல் நிறைவு பெற்றுள்ளது. இதற்கான பட்டியலை காங்கிரஸ் மேலிடத்திற்கு ஓரிரு நாட்களில் அனுப்படும். வேட்பாளரை தேசிய தலைமை விரைவில் அறிவிக்கும்.

ஏற்கனவே பிரசாரத்தை தொடங்கி விட்டோம், எதிர்க்கட்சி பல்வேறு பிரிவாக செயல்படுகிறது, குழப்பத்தில் உள்ள அவர்கள் யார் போட்டியிடுவது குறித்து பொறுத்து இருந்து பார்ப்போம். தேர்தல் பிரசாரத்தை பொறுத்தவரை இடைத்தேர்தல் என்பதால் தேசிய தலைவர்கள் வர வாய்ப்பில்லை. மாநிலத் தலைவர்கள் அனைவரும் பிரசாரம் செய்வோம். காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஓபிஎஸ் திடீர் குஜராத் பயணம்.. காரணம் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.