சென்னை: கார்த்திக் யோகி இயக்கத்தில், கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் - சோல்ஜர் பேக்டரி சார்பில் பிரமாண்டமாக தயாராகிவரும் படம் 'டிக்கிலோனா'. முழுக்க முழுக்க பொழுதுபோக்கு அம்சத்துடன் உருவாகும் இந்தப் படத்தில் நடிகர் சந்தானம் மூன்று வேடங்களில் நடித்துள்ளார்.
இப்படத்தில் அகனா, ஷிரின் ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில், இந்திய கிரிக்கெட் அணியில் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
![சந்தானம் புதிய படம் santhanam movie santhanam latest movie dikilona movie update dikkilona movie update dikkilona movie release date zee5 ott ஹர்பஜன் சிங் டிக்கிலோனா படத்தின் தேதி ஜீ5 ஓடிடி தளம் ஜீ5](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12810306_har.jpg)
ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதா?
இதனைத் தொடர்ந்து யோகி பாபு, ஆனந்த்ராஜ், முனிஷ்காந்த், நிழல்கள் ரவி, சித்ரா லட்சுமணன், மொட்டை ராஜேந்திரன், ஷாரா எனப் படத்தில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இடம்பெற்றுள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
![சந்தானம் புதிய படம் santhanam movie santhanam latest movie dikilona movie update dikkilona movie update dikkilona movie release date zee5 ott ஹர்பஜன் சிங் டிக்கிலோனா படத்தின் தேதி ஜீ5 ஓடிடி தளம் ஜீ5](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12810306_san---copy.jpg)
இப்படத்தின் கதை சயின்ஸ் ஃபிக்ஷன் பாணியில், டைம் மெஷினை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளதாலும், சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்க உள்ளதாலும், ரசிகர்களின் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் படத்தின் தயாரிப்பு நிறுவனமான கேஜேஆர் ஸ்டுடியோஸ், படத்தின் அப்டேட் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது. 'வாத்தியாரே ஈவ்னிங் 5 மணிக்கு டிக்கிலோனா அப்டேட் வருது.. ரெடியா இருங்க' என கேஜேஆர் ஸ்டுடியோ தனது ட்விட்டர் பகுதியில் வெளியிட்டிருந்தது.
அந்த வகையில் படத்தின் அப்டேட் மாலை வெளியிடப்பட்டது. அதில் படம் நேரடியாக ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது வருகின்ற செப்டம்பர் 10ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியன்று வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சந்தானம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
-
#Dikkiloona game starts from 10th of September ⏲️
— Santhanam (@iamsanthanam) August 18, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Premiering exclusively on @ZEE5Tamil 📺#DikkiloonaUpdate @thisisysr @karthikyogitw @kjr_studios @SoldiersFactory @sinish_s @iYogiBabu @AnaghaOfficial@KanchwalaShirin @sonymusicsouth @proyuvraaj @gobeatroute pic.twitter.com/DFHgwKTuFz
">#Dikkiloona game starts from 10th of September ⏲️
— Santhanam (@iamsanthanam) August 18, 2021
Premiering exclusively on @ZEE5Tamil 📺#DikkiloonaUpdate @thisisysr @karthikyogitw @kjr_studios @SoldiersFactory @sinish_s @iYogiBabu @AnaghaOfficial@KanchwalaShirin @sonymusicsouth @proyuvraaj @gobeatroute pic.twitter.com/DFHgwKTuFz#Dikkiloona game starts from 10th of September ⏲️
— Santhanam (@iamsanthanam) August 18, 2021
Premiering exclusively on @ZEE5Tamil 📺#DikkiloonaUpdate @thisisysr @karthikyogitw @kjr_studios @SoldiersFactory @sinish_s @iYogiBabu @AnaghaOfficial@KanchwalaShirin @sonymusicsouth @proyuvraaj @gobeatroute pic.twitter.com/DFHgwKTuFz