ETV Bharat / state

சென்னை விமான நிலையம்: கார் பார்க்கிங் டோக்கன் பெறுவதில் சிரமம் - சென்னை விமான நிலையம்

சென்னை விமான நிலையத்தில் கார் பார்க்கிங் டோக்கன் பெறுவதில் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.

கார் பார்க்கிங் டோக்கன் பெறுவதில் சிரமம்

author img

By

Published : Dec 5, 2022, 9:28 AM IST

சென்னை: விமான நிலையத்தில் ரூ.250 கோடி செலவில் அமைக்கப்பட்ட 6 அடுக்கு மல்டிலெவல் கார் பார்க்கிங் நேற்று (டிச.4) அதிகாலை முதல் செயல்பாட்டிற்கு வந்தது. இந்த கார் பார்க்கிங் செயல்படுத்தும் முறையை தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு விட்டன. இதனால் ரூ.20 முதல் ரூ.300 வரை இருந்த வாகன நிறுத்த கட்டணம் ரூ.30 முதல் ரூ.600 வரை பல மடங்கு உயர்த்தப்பட்டன.

சென்னை விமான நிலையத்தில் ப்ரீபெய்ட் டாக்ஸி 304 கார்கள் உள்ளன. அந்த ப்ரீபெய்ட் டாக்ஸி ஒவ்வொன்றும் தற்போது இந்திய விமான நிலைய ஆணையத்திற்கு மாதம் ரூ.2,500 பார்க்கிங் கட்டணமாக வசூலித்தது. ஆனால் இனிமேல் தனியார் ஒப்பந்ததாரர் ஒவ்வொரு டாக்ஸிக்கும் ரூ. 6,500 மாதம் கட்ட வேண்டும்.

கார் பார்க்கிங் டோக்கன் பெறுவதில் சிரமம்

அதோடு 104 டாக்சிகளுக்கு மட்டுமே இந்த கட்டணத்தில் இடம் ஒதுக்கப்படும் என்றும் மீதிமுள்ள 200 கார்களுக்கு 30 நிமிடங்களுக்கு ரூ. 75 வீதம் கட்ட வேண்டும் என கூறப்படுகிறது. இது தொடர்பாக அதிகாரிகளிடம் டாக்ஸி சங்கத்தினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

விமான நிலையத்திற்குள் வாகனங்கள் நுழைவு வாயில் அருகே கட்டண சாவடிகள் அமைத்து டோக்கன் வழங்கப்படுகிறது. நேற்று பன்னாட்டு மற்றும் உள்நாட்டு முனையத்தில் அதிக விமான சேவைகள் இருந்தன. இதனால் வாகனங்கள் அதிகமாக வந்தன. இந்த நிலையில் புதிய டோக்கன் முறையால் காலை முதல் சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் வரை வாகனங்கள் வரிசையில் நின்றன.

மேலும் டோக்கன் பெறுவதில் சிரமங்கள் ஏற்பட்டன. இதனால் கட்டண சாவடி ஊழியர்களிடம் விமான நிலையத்திற்கு வந்தவர்கள் கடும் வாக்குவாத்தில் ஈடுபட்டனர். விமானிகள், பயணிகள் ஆகியோர் வாகனங்கள் நீண்ட வரிசையில் இருந்ததால் விமானத்திற்கு செல்ல தாமதம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இதனால் விமான பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.

இதையும் படிங்க: ஜி 20 ஆலோசனைக் கூட்டம்; ஈபிஎஸ்-க்கு அழைப்பு - கொடுக்கப்பட்டதா புது அங்கீகாரம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.