ETV Bharat / state

கிணற்றில் தவறி விழுந்த சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி உயிரிழப்பு - chennai district news

சென்னை: புதுவண்ணாரப்பேட்டையில் கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

கிணற்றில் தவறி விழுந்த சிறுவன்
கிணற்றில் தவறி விழுந்த சிறுவன்
author img

By

Published : Dec 2, 2020, 6:17 PM IST

சென்னை புதுவண்ணாரப்பேட்டை தங்கவேல் பிள்ளை தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ் (15). இவர் தனது நண்பர்களுடன் அதே பகுதியில் உள்ள மைதானத்தில் கிரிக்கெட் விளையாடியுள்ளார்.

அப்போது பந்து அங்கிருந்த கிணற்றில் விழுந்தது. அதை எடுக்கச் சென்ற சிறுவன் கிணற்றிற்குள் தவறிவிழுந்தார். உடனே சக நண்பர்கள் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர்.

கிணற்றில் தவறிவிழுந்த சிறுவன்

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் சிறுவனை மயக்க நிலையில் மீட்டனர். அதிமுக வடசென்னை வடகிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ் தனது காரில் சிறுவனை அழைத்துச் சென்று ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தார். தற்போது சிறுவன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

இதையும் படிங்க: கிணற்றில் தவறி விழுந்த கரடி: 5 மணி நேரத்திற்குப் பிறகு மீட்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.