ETV Bharat / state

அக்குபஞ்சர், ஆயுர்வேதம், சித்த மருத்துவம் வொர்ஸ்ட்! - council

சென்னை: அக்குபஞ்சர், சித்தா, ஆயுர்வேத முறையில் சர்க்கரை நோயை குணப்படுத்திவிட முடியும் என்பதை மக்கள் நம்ப வேண்டாம் என்று மருத்துவர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

panneer selvam
author img

By

Published : Aug 17, 2019, 6:16 AM IST

சென்னை டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைகழகத்தில் சர்க்கரை நோய் குறித்த பொது மக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நீரிழிவு நோய் சிறப்பு மருத்துவர் பன்னீர்செல்வம் பங்கேற்று சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகளையும், நோய் வந்த பின்னர் உண்ணவேண்டிய உணவு முறைகள் குறித்தும் மக்களுக்கு விளக்கினார்.

மருத்துவர் பன்னீர்செல்வம்

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள் அனைவரும் நோயினால் பாதிப்பு ஏற்பட்ட பின்புதான் சிகிச்சை பெற வருகின்றனர். எனவே 30 வயது அடைந்தவர்கள் தாங்களாகவே சர்க்கரை நோய் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். சர்க்கரை நோய் இல்லாவிட்டாலும் தினமும் உடற்பயிற்சி செய்வது நல்லது. தமிழ்நாட்டில், போலியோ குடும்ப கட்டுப்பாடு போன்றவை குறித்து தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தியதால் அவை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், சர்க்கரை நோயை அக்குபஞ்சர், சித்தா மற்றும் ஆயுர்வேத முறையில் முற்றிலும் குணப்படுத்திவிடலாம் என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படாத ஒன்றாகும். அலோபதி மருத்துவத்தில் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த மட்டுமே முடியும். அக்குபஞ்சர் மூலம் முற்றிலும் குணப்படுத்த முடியும் என அவர்கள் நிரூபிக்க தயாரா? என கேள்வி எழுப்பினார். மேலும், சமூக வலைதளங்களில் சர்க்கரை நோய் குறித்து கூறப்படுவதை நம்பி யாரும் சிகிச்சை மேற்கொள்ள வேண்டாம். சர்க்கரை நோய் இருப்பது தெரிந்தால் தங்களது மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் எனக் கூறினார்.

Intro:குளிர்பானங்கள், ஜூஸ், ஜங்க்புட் உண்டால் சர்க்கரை நோயை அதிகரிக்கும்

Body:தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைகழகத்தில் சர்க்கரை நோய் குறித்த பொது மக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நீரிழிவு நோய் சிறப்பு மருத்துவர் பன்னீர்செல்வம் கலந்துகொண்டு சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகளையும், நோய் வந்த பின்னர் உண்ணவேண்டிய உணவு முறைகள் குறித்தும் பொது மக்களுக்கு விளக்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவர் பன்னீர்செல்வம், பொதுமக்களிடம் நோய் குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும். எய்ட்ஸ், காலரா, லேப்ரசி போன்ற பெரும்பாலான நோய்களை விழிப்புணர்வினை ஏற்படுத்தி கட்டுப்படுத்தி உள்ளோம். ஆனால் சர்க்கரை நோய், கொழுப்புச் சத்து, ரத்த அழுத்தம், உடல் பருமன் போன்றவை அதிக நாட்கள் இருப்பதால் மாரடைப்பு, கண்பார்வை இழப்பு, சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு காலினை எடுத்தல் போன்றவை நடைபெறுகிறது. பொதுமக்களும் நோயினால் பாதிப்பு ஏற்பட்ட பின்னர்தான் சிகிச்சை பெற வருகின்றனர். எனவே 30 வயது அடைந்தவர்கள் தாங்களாகவே சர்க்கரை நோய் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். சாப்பிடுவதற்கு முன்னர் 100 மில்லி அளவிலும் சாட்ட பின்னர் 140 மில்லி அளவிலும் இருந்தால் சர்க்கரை நோய் இல்லை என கூறலாம். சர்க்கரை நோய் இல்லாவிட்டாலும் தினமும் உடற்பயிற்சி செய்து கொண்டு, சரியான உணவுகளை உண்ண வேண்டும். குளிர்பானங்கள், ஜூஸ், ஐஸ்கிரீம் ,ஜங்க் புட் போன்றவற்றை உண்பதால் குளுக்கோஸ் மற்றும் கொழுப்புச்சத்து அதிகமாகிறது. ரத்தம் குறைந்த ரத்த குழாயில் செல்லாமல் மாரடைப்பு, மூளை செயலிழப்பு, கால் பாதிப்பு போன்றவை ஏற்படும் பொழுதுதான் அவரும் அவரது குடும்பத்தினரும் உணர்கின்றனர். தமிழகத்தில் போலியோ குடும்ப கட்டுப்பாடு போன்றவை குறித்து தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தியதால் தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதுபோன்று சர்க்கரை நோய்க்கும் விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும். சர்க்கரை நோய் அக்குபஞ்சர் மற்றும் சித்தா ஆயுர்வேதா முறையில் முற்றிலும் குணப்படுத்திவிடலாம் என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படாத ஒன்றாகும். அலோபதி மருத்துவத்தில் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த மட்டுமே முடியும். அக்குபஞ்சர் மூலம் முற்றிலும் குணப்படுத்த முடியும் என அவர்கள் நிரூபிக்க தயாரா? என கேள்வி எழுப்பினார். சமூக வலைதளங்களில் சர்க்கரை நோய் குறித்து கூறப்படுவதை நம்பி யாரும் சிகிச்சை மேற்கொள்ள வேண்டாம். சர்க்கரை நோய் இருப்பது தெரிந்தால் தங்களது மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் எனக் கூறினார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.