சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில், இன்று (ஏப்ரல் 11) விளையாட்டுத் துறை மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்து. இந்த நிலையில் பேரவையில் பேசிய தருமபுரி பாமக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன், "தமிழ்நாட்டில் அதிக இளைஞர்களால் ஈர்க்கப்படும் போட்டியான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி, இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் தமிழ்நாட்டைச் சார்ந்த சென்னை சூப்பர் கிங்ஸ் என்ற அணி உள்ளது.
தமிழ்நாட்டில் திறமையான வீரர்கள் பலர் இருந்தும், ஒருவரைக் கூட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தேர்வு செய்யவில்லை. ஆனால் தமிழ்நாட்டு அணி என்பது போல, தமிழ்நாட்டு மக்களிடம் விளம்பரம் செய்து, பெரும் வர்த்தக லாபத்தை அடைந்து வருகிறது. தமிழ்நாட்டு வீரர்களே இல்லாத இந்த அணியை, தமிழ்நாடு அரசு விளையாடத் தடை செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கிறேன்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: CSK Vs MI : எல் கிளாசிகோ ஆட்டத்தில் சென்னை மாஸ் வெற்றி - மும்பையை பந்தாடியது!