கர்நாடக அணைகளிலிருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டதால், நேற்று (ஆக. 20) ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து 42 ஆயிரம் கனஅடியாக இருந்தது. இதில் நேற்று மாலை நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக குறையத் தொடங்கியது.
இந்நிலையில் இன்று (ஆக. 21) காலை நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 28 ஆயிரம் கனஅடி குறைந்து, 14 ஆயிரம் கனஅடியாக உள்ளது. நீர்வரத்து குறைந்து அதன் காரணமாக மேட்டூர் அணைக்குச் செல்லும் நீரின் அளவும் குறைந்துள்ளது.
இதையும் படிங்க...வேண்டுவோருக்கு வேண்டுவன அருளும் விநாயகப் பெருமான்! - முதலமைச்சர் வாழ்த்து