2002ஆம் ஆண்டு இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த துள்ளுவதோ இளமை படம் மூலம் அறிமுகமான தனுஷ், தனி ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார்.
இந்நிலையில் இம்மாதம் 28ஆம் தேதி தனது 37ஆவது பிறந்தநாளை தனுஷ் கொண்டாட உள்ளார். இதனையொட்டி தனுஷின் ரசிகர்கள் அவரின் பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்துவருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு மாவட்ட தனுஷ் ரசிகர் மன்றம் சார்பில் தனுஷ் ரசிகர் மன்ற தலைவர் தலைமையில் தாம்பரம் அடுத்த அஞ்சுகம் நகர் பகுதியில் கரோனா ஊரடங்கால் வாழ்வாதாரங்களை இழந்து தவித்து வரும் ஏழை எளிய மக்கள் 500க்கும் மேற்பட்டோருக்கு ரூபாய் ஆயிரம் மதிப்புள்ள அரிசி, மளிகை பொருள்கள் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை வழங்கினர். அப்பகுதி மக்கள் தகுந்த இடைவெளியை பின்பற்றி முகக்கவசம் அணிந்தவாறு அத்தியாவசிய பொருட்களை வாங்கிச் சென்றனர்.
அதுமட்டுமின்றி இரண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு வழங்கினார். மேலும் இந்நிகழ்ச்சியில் தனுஷ் ரசிகர்கள், திமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர் கொண்டனர்.
இதையும் படிங்க....ஐஐடி நுழைவுத் தேர்வுகளால் அவதிக்குள்ளாகும் மாணவர்கள்: ஈடிவி பாரத் விவாதம்