ETV Bharat / state

சர்ப்ரைஸ் விசிட் அடித்த டிஜிபி.. தயாராக இருந்த போலீசார்..! - தமிழ்நாடு டிஜிபி

செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்ட தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு, எழுத்தருக்கு 5 ஆயிரம் ரூபாய் சன்மானம் அளித்து பாராட்டினார்.

dgp Sylendra Babu
dgp Sylendra Babu
author img

By

Published : Nov 29, 2022, 7:38 PM IST

சென்னை: கிழக்கு கடற்கரைச் சாலையிலுள்ள காவல்நிலையத்தில் டிஜிபி சைலேந்திர பாபு திடீர் ஆய்வு செய்யவிருப்பதாக தகவல் பரவியது. இதனையடுத்து காவல் நிலையத்திற்கு செய்தியாளர்கள் சென்று பார்த்த போது, காவல்துறையினர் தயார் நிலையில் இருந்தனர். காவல்துறை தலைவர் வரவிருப்பது முன்கூட்டியே தெரிந்ததால் செரிமோனியல் யூனிஃபாம் எனப்படும் சீருடை அணிந்து தயார் நிலையில் இருந்தனர்.

இதனையடுத்து ஆய்வு மேற்கொண்ட டிஜிபி காவல் நிலையத்தில் உள்ள சரித்திர பதிவேடுகள், குற்றச்சம்மந்த பதிவேடுகளை ஆய்வு மேற்கொண்டார். மேலும் சமீபத்தில் செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் என்னமாதிரியான குற்ற வழக்குகளில் ஈடுபட்டவர்களை கைது செய்துள்ளீர்கள் என்றெல்லாம் காவல் ஆய்வாளர் நடராஜன் மற்றும் எழுத்தர் ராஜாமணியிடம் விசாரித்தார்.

காவல்நிலையத்தில் பதிவேடுகளை ஆய்வு செய்த டிஜிபி

காவல் நிலையத்தில் பதிவேடு அனைத்தும் முறையாக பின்பற்றி இருந்ததால் காவல் நிலைய எழுத்தர் ராஜாமணிக்கு ரூ.5000 வெகுமதி வழங்கி பாராட்டினார். பின்னர் காவல் நிலையத்தில் உள்ள உதவி ஆய்வாளர்கள், காவலர்களிடம் நிறை குறைகளை கேட்டறிந்து உடல்நலம் குறித்தும் விசாரித்தார். பின்னர் அனைவருடனும் புகைப்படம் எடுத்துக்கொண்டார். டிஜிபியின் அதிரடி ஆய்வின் போது பள்ளிக்கரணை துணை ஆணையர் ஜோஷ் தங்கையா, செம்மஞ்சேரி சரக உதவி ஆணையாளர் ரியாசுதீன் ஆகியோரும் உடன் சென்றிருந்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.