ETV Bharat / state

"பீகார் தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக வெளியான வீடியோ உண்மையில்லை" - டிஜிபி சைலேந்திரபாபு விளக்கம்! - திருப்பூரில் பீகார் தொழிலாளர்கள்

பீகார் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வெளியான இரண்டு வீடியோக்களும் தவறாக சித்தரிக்கப்பட்டவை என்றும், பொதுமக்கள் யாரும் இவ்வாறு போலியான வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்ப வேண்டாம் என்றும் டிஜிபி சைலேந்திரபாபு கேட்டுக் கொண்டுள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Mar 3, 2023, 7:30 AM IST

பீகார் மக்களை தமிழ்நாட்டினர் தாக்கியதாக வெளியான வீடியோ உண்மையில்லை - டிஜிபி சைலேந்திரபாபு விளக்கம்

சென்னை: தமிழ்நாட்டில் பணி புரியும் பீகார் இளைஞர்கள் உள்ளூர் மக்களால் தாக்கப்படுவதுபோல, இரண்டு வீடியோக்கள் அண்மையில் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. இந்த வீடியோக்கள் வடமாநிலங்களில் வேகமாக பரவி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வீடியோவை பார்க்கும் வட மாநிலத்தவர்கள் மத்தியில் தவறான எண்ணத்தை உருவாக்கும் வகையில் இந்த வீடியோ அமைந்து இருந்தது. குறிப்பாக பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் இது தொடர்பாக தனது டிவிட்டர் பதிவில் கவலை தெரிவித்திருந்தார். நிதிஷ் குமார் தனது ட்விட் பதிவில் கூறுகையில், "தென் மாநிலத்திற்கு வாழ்வாதாரம் தேடி வரும் பீகாரைச் சேர்ந்த தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு தமிழ்நாடு அதிகாரிகளுடன் பேசி உறுதி செய்யுமாறு பீகார் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளேன்" என்று பதிவிட்டுள்ளார்.

இந்த நிலையில், தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு இது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் "சமூக வலைதளங்களில் 2 போலி வீடியோக்கள் பரவி வருகின்றன. பீகார் தொழிலாளர்கள் தாக்கப்படுவதுபோல அந்த வீடியோக்களில் காட்டப்பட்டுள்ளன. அந்த வீடியோக்கள் தவறானவை, போலியானவை. இரு வீடியோக்களும் ஏற்கனவே முன்பு நிகழ்ந்த இரு வேறு சம்பவங்களை தவறாக திரித்து வெளியிடப்பட்டு இருக்கின்றன.

இந்த இரு வீடியோக்களில் ஒன்று திருப்பூரில் பீகார் தொழிலாளர்கள் இரு பிரிவாக மோதிக்கொண்டதுடன் தொடர்புடையது, மற்றொன்று கோவையில் உள்ளூர் மக்கள் மோதிக்கொண்ட வீடியோ" என்று கூறியுள்ளார். மேலும், தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருவதாகவும், பொதுமக்கள் யாரும் போலியான வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இவ்வாறு பீகார் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் 2 வீடியோக்கள் பரவி வருகின்றன. இதன் எதிரொலியாக பீகார் மாநில முதலமைச்சரின் சமூக வலைதளத்தில், தேசிய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளத்தில் இந்த வீடியோவை பதிவிடப்பட்டது.

மேலும், அம்மாநில சட்டப்பேரவையில் கடந்த மார்ச்.2ஆம் தேதி நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் எதிர்கட்சி தலைவர் விஜய் சின்ஹா, தமிழ்நாட்டில் புலம்பெயர்ந்த பீகார் மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாகவும், இது குறித்து பாஜக எம்எல்ஏ-க்களும், பீகார் அரசும் கவலைப்படுவதில்லை என்று குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

அத்தோடு, கடந்த மார்ச்.1ஆம் தேதி நடந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்த நாள் விழாவில் பீகார் மாநில துணை முதலமைச்சர் தேஜஷ்வி யாதவ், எவ்வாறு கலந்து கொள்ளலாம் என கேள்வி எழுப்பிய எதிர்கட்சியினர் சட்டபேரவையின் முன்பு அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இவ்வாறு தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர்கள் வருகை குறித்து தொடர்ந்து சமூக வலைதளத்தில் பேசுபொருளாகி வருகிறது. சமீபத்தில் ஓடும் ரயிலில் வட மாநில தொழிலாளிகளை ஒருவர் கடுமையாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து உடனடியாக வட மாநில தொழிலாளியை தாக்கிய நபரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து தமிழ்நாடு ரயில்வே காவல்துறை கைது செய்து நடவடிக்கை எடுத்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பீகார் மக்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு டிஜிபி சைலேந்திர பாபு மறுப்பு!!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.