சென்னை: ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தை குறித்து ஆளுநர் மாளிகை தொடர்ந்து தவறான தகவலை கூறிவருகிறது. அது முழுவதும், தவறான தகவல்கள் காவல் துறை நியாமனா வழியில் விசாரணையானது நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தார்.
இது குறித்து சென்னையில் இன்று காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் இன்று (அக்.27) செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர், 'ரவுடி கருக்கா வினோத், ஆளுநர் மாளிகை பகுதியில் தனியாக நடந்து வந்தது உள்ளார். அவருடன் யாரும் வரவில்லை என்றும் காவல்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர். ஆளுநர் மாளிகைக்குள் விஷமிகள் சிலர் உள்ளே நுழைய முயற்சித்ததாக ஆளுநர் மாளிகை தரப்பில் கூறப்படுவது உண்மையில்லை. அதை விளக்கி காட்டும் காண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் காவல்துறையினர் வெளியிட்டனர். அந்த காட்சிகள் குறித்து விளக்கியுள்ளனர். மேலும், ஆளுநர் மாளிகை இந்திய தண்டனை சட்டம் (IPC) 124-ஐ குறிப்பிடுகிறது. இந்த வழக்கிற்கு இதுவரை அந்த சட்டப்பிரிவு தேவைப்படவில்லை.
தமிழ்நாடு அமைதியான மாநிலம்; ஆளுநர் மாளிகை கூறுவதில் உண்மையில்லை: மேலும் விசாரணையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விசாரணையில், இந்த பிரிவுகளின் கீழ் வந்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். பல தனியார் நிறுவன ஆய்வுகளின் படி, சென்னை மற்றும் தமிழ்நாடு அமைதியான மாநிலமாகவும்; முற்றிலும் பாதுகாப்பனாதாகவும் இருந்து வருகிறது. மேலும், ஆளுநர் மாளிகையில் எந்த பாதுகாப்புக் குறைபாடும் இல்லை. 253 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் உள்ளனர். மேலும், இரட்டை அடுக்கு பாதுகாப்பு ஆனது தமிழ்நாடு காவல்துறை சார்பிலும், சி.ஆர்.பி.எஃப்வ் (CRPF) சார்பிலும் முழு பாதுகாப்பானது அளிக்கப்பட்டு வருகிறது' என்று தெரிவித்தார்.
மயிலாடுதுறையில் ஆளுநர் மீது தாக்குதல் எனக் கூறுதில் உண்மையில்லை: இது குறித்து கூடுதல் காவல் இயக்குநர் ஏ.அருண் கூறுகையில், 'ஆளுநர் மயிலாடுதுறை சென்றபோது, கம்புகள் போன்றவற்றால் தாக்க முயன்றதாக கூறப்படுவதில் உண்மையில்லை. தருமபுரத்துக்கு ஆளுநர் ரவி சென்றபோது, பதிவான விடியோவை வெளியிட்டு காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. மேலும், மயிலாடுதுறையில் நடந்த சம்பவம் தொடர்பாக விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்றும், பெட்ரோல் குண்டு வீச்சு தொர்பாக, ஆளுநர் மாளிகை சார்பில் புகார் அளிக்கப்பட்டவுடன் 73 பேர் கைது செய்யப்பட்டனர். ஆளுநர் மாளிகையில் இருந்து தெரிவிக்கப்பட்ட தகவல் உண்மைக்கு புறம்பானது' என்று அவர் தெரிவித்த்தார்.
இது குறித்து சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் கூறுகையில், 'ரவுடி வினோத் மீது 9 வழக்குகள் உள்ளன. இந்த சம்பவம் நடந்த உடன் அவரை நாங்கள் பிடித்து கைது செய்து விட்டோம். தற்போது நீதிமன்றக் காவலில் உள்ளார். மேலும், இந்த சம்பவம் குறித்து காவல் துறை அனைத்து விதமான கோணத்தில் நடைபெற்று வருகிறது' என்று தெரிவித்தார்.
இதனிடையே, ரவுடி கருக்கா வினோத்தை 3 நாட்கள் நீதிமன்றக் காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்ள சென்னை காவல்துறை சார்பில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அனுமதி கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆளுநர் மாளிகையில் குண்டு வெடித்ததாக கூறுவதில் உண்மையில்லை - டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கம்