சென்னை: தமிழ்நாட்டில் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக நடக்க இருக்கிறது. இதற்காகத் தமிழ்நாடு முழுவதும் சட்டம்-ஒழுங்கு காவல் துறையினர் சுமார் ஒரு லட்சம் பேர் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இவர்களைத் தவிர ஆயுதப்படை, ஊர்க்காவல் படை, முன்னாள் ராணுவத்தினர், ஓய்வுபெற்ற காவலர்களும் தேர்தல் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட இருக்கிறார்கள்.
பதற்றமான வாக்குச்சாவடிகளில் துணை ராணுவத்தினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். இவர்களுடன் சட்டம்-ஒழுங்கு காவல் துறையினர் ஈடுபடுகின்றனர்.
மேலும் தமிழ்நாட்டின் மற்ற காவல் பிரிவுகளிலிருந்தும் சுமார் 4,495 காவலர்கள் கூடுதலாகப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த காவல் துறைத் தலைவர் ஜே.கே. திரிபாதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதையும் படிங்க: திமுக - பாஜக மோதல்; தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் மீது தாக்குதல்!