ETV Bharat / state

ஏஎஸ்பி முதல் டிஜிபி வரை.. ஓய்வுக்கு முன்பு கருணாசாகர் ஐபிஎஸ் செய்த அதிரடி ஆக்‌ஷன்! - தமிழ்நாடு காவல்துறையில் டிஜிபி ஓய்வு

தமிழ்நாடு காவல்துறையில் 32 காலமாக பணியாற்றிய பி.கருணாசாகர் ஐபிஎஸ் ஓய்வு பெற்றார்.ஏஎஸ்பியாக கும்பகோணத்தில் பணியை தொடங்கிய அவர் காவலர் நலன் பிரிவு டிஜிபியாக இருந்த வரை அசாத்திய பணிகளை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Apr 1, 2023, 7:25 AM IST

சென்னை: பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் கருணாசாகர். இவர் டெல்லி பல்கலைக்கழகத்தில் முதுகலை படிப்பை முடித்துள்ளார். பின்னர் 1991 ஆம் ஆண்டு அரசு தேர்வில் தேர்ச்சி பெற்று தமிழ்நாடு காவல்துறை பேட்ச் அதிகாரியாக பணிக்குச் சேர்ந்தார். அதன் பின், ஐபிஎஸ் அதிகாரியான கருணாசாகர் முதலாவதாகக் கும்பகோணம் ஏஎஸ்பி ஆகத் தனது பணியைத் தொடங்கியுள்ளார்.

கலப்பட சாராயம் குடித்துப் பல உயிர்ப் பலியான நிலையில், கருணாசாகர் திறம்படத் தீவிர சோதனை நடத்தி டன் கணக்கில் சாராயம் பறிமுதல் செய்தது பாராட்டைப் பெற்றார். அதன் பிறகு ஜாதி பிரச்னை உச்சத்திலிருந்த திண்டுக்கல், உசிலம்பட்டி ஆகிய மாவட்டங்களிலும் சிறப்பாகச் செயல்பட்டு சட்டம் ஒழுங்கை கருணாசாகர் பாதுகாத்தவர். பின்னர் சென்னை போக்குவரத்து துணை ஆணையராக பணியாற்றிய போது விபத்து நிகழும் பகுதிகள் என வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை கொடுக்கும் வகையில் பெயர்ப் பலகைகளை நிறுவினார்.

இவரது நடவடிக்கையால் சென்னையில் விபத்துகள் குறைக்கப்பட்டது. வெறும் போக்குவரத்து மட்டும் இல்லாமல் சட்டம் ஒழுங்கு பணியையும் சேர்த்து கருணா சாகர் சிறப்பாக பணியாற்றிவர். குறிப்பாக டிஐஜி ஆக கருணா சாகர் இருந்த போது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திய முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் தத்து மகன் விஜயகுமார் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட போது விரைந்து குற்றவாளிகளைக் கண்டுபிடித்து அவர்களுக்குத் தண்டனையை வாங்கி கொடுத்த செயல் கருணா சாகருக்கு மிகுந்த பாராட்டைப் பெற்றுக் கொடுத்தது.

பின்னர் கூடுதல் ஆணையர் வடக்கு, ஏடிஜிபி விரிவாக்கம் என பல முக்கிய பொறுப்புகளிலும் பணியாற்றியுள்ளார். மேலும் காவலர்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வந்த கருணா சாகர் கடைசியாகக் காவலர் நலன் பிரிவு டிஜிபியாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் தமிழ்நாடு காவல்துறையில் 32 ஆண்டுகளாக பணியாற்றி வந்த டிஜிபி கருணாசாகர் மார்ச் 31 பணி ஓய்வு பெறுகிறார்.

தற்போது ஓய்வு பெறுவதையொட்டி டிஜிபி கருணா சாகருக்குத் தமிழ்நாடு காவல்துறை சார்பில் அணிவகுப்பு மரியாதை உடன் பிரிவு உபசார விழா நிகழ்ச்சி சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு, காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் அதிவிரைவு படை, கமாண்டோ படை, தமிழ்நாடு ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை உள்ளிட்ட படையினரின் அணிவகுப்பு மரியாதையைத் திறந்த வாகனத்தில் சென்று டிஜிபி கருணா சாகர் பார்வையிட்டு, பின் அவர்களின் அணிவகுப்பு மரியாதையை மனதார ஏற்றுக் கொண்டார்.

தொடர்ந்து நிகழ்ச்சி மேடையில் பேசிய டிஜிபி சைலேந்திரபாபு, "டிஜிபி கருணா சாகர் தமிழ்நாடு காவல்துறையில் சிறப்பான பணியை புரிந்து இருப்பதாகவும், குறிப்பாக காவலர்களின் நலனில் மிகுந்த அக்கறை காட்டியதாகவும் அவர் தெரிவித்தார். அதிலும் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளை குறைத்ததில் முக்கிய பங்கு கருணா சாகருக்கு உண்டு எனவும் தெரிவித்தார். மேலும் சமீபத்தில் வட மாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பிய பிரச்னை பூதாகரமாக இருந்த நிலையில், வட மாநிலத்தில் பிறந்தவர் கருணாசாகர் என்பதாலும், பிரபலமான முகம் என்பதாலும் தமிழ்நாடு பாதுகாப்பான மாநிலம் என வடமாநிலங்களில் கூறி சுமுகமாக பிரச்னை முடிக்க பெரும் உதவிய இருந்தார்" என தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து பேசிய டிஜிபி கருணாசாகர், "ஸ்காட்லாந்து காவல்துறையைப் போல தமிழ்நாடு காவல்துறையைக் கூறுவதால், அதில் ஐபிஎஸ் அதிகாரிகள் பெருமைப்படக் கூடாது. இந்த நிலைக்குக் கொண்டு வந்தது தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றும் காவலர்கள் தான். அவர்கள் தான் முக்கிய காரணம்" என்று கூறினார்.

இதையும் படிங்க: CSK Vs GT: சென்னையை வீழ்த்திய குஜராத்.. ஆனாலும் சிஎஸ்கே பேன்ஸ் ஹேப்பி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.