ETV Bharat / state

பெண் சிசு கொலை முதல் சிலை கடத்தல் தடுப்பு வரை அதிரடி - ஓய்வுபெறும் டிஜிபி ஜெயந்த் முரளி! - tamilnadu police

தமிழ்நாடு காவல் துறையில் 31 ஆண்டுகளாக பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக பணியாற்றிய டிஜிபி ஜெயந்த் முரளி ஐபிஎஸ் இன்றுடன் ஓய்வுபெறுகிறார்.

இன்றுடன் ஓய்வு பெறுகிறார் டிஜிபி ஜெயந்த் முரளி!

author img

By

Published : Dec 30, 2022, 5:04 PM IST

Updated : Dec 30, 2022, 10:41 PM IST

சென்னை: திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவரான ஜெயந்த் முரளி, பிஹெச்.டி பயலாஜி படிப்பை முடித்துள்ளார். பின்னர் யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்று, ஐபிஎஸ்-ஸை தேர்வு செய்தார். இதன்படி 1991ஆம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான ஜெயந்த் முரளி, தமிழ்நாடு காவல் துறையில் மதுரை உசிலம்பட்டியில் ஏ.எஸ்.பி-யாக பணியாற்றினார்.

அப்போது பெண் சிசு மரணங்கள் தலைதூக்கி இருந்த நிலையில், முதன்முறையாக பெண் சிசு மரணத்தை, கொலை வழக்காக ஜெயந்த் முரளி பதிவு செய்தது அனைவரது பாராட்டையும் பெற்றது. இதனையடுத்து திருநெல்வேலி எஸ்.பி.யாக இருந்தபோது, சிவகிரியில் சாதி ரீதியாக பெரும் கலவரம் ஏற்பட்டு பல பேர் உயிரிழந்தனர்.

அந்த சமயத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தி கலவரம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அப்போது கலவரத்தை சிறப்பான முறையில் கையாண்டமைக்காக உயர் அலுவலர்களால் ஜெயந்த் முரளி பாராட்டப்பட்டார். அதனைத்தொடர்ந்து மதுரை டிஐஜியாகவும், அதன்பிறகு மத்திய அரசு பணியான சிஐஎஸ்எஃப்-பில் 8 ஆண்டுகளாகவும் பணிபுரிந்தார்.

அதன் பிறகு லஞ்ச ஒழிப்புத்துறை ஏடிஜிபியாக பணியாற்றிய ஜெயந்த் முரளி, தொடர்ச்சியாக அரசு அலுவலகங்களில் ரெய்டு நடத்தியும், கிடப்பில் உள்ள வழக்குகளை விரைந்தும் முடித்தார். பின்னர் ஏடிஜிபி சட்டம் ஒழுங்கு பிரிவில் பணிபுரிந்தார். பின்னர் டிஜிபியாக பதவி உயர்வுபெற்ற ஜெயந்த் முரளி, சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு டிஜிபியாக பணியாற்றினார்.

தமிழ்நாட்டில் திருடப்பட்ட மற்றும் காணாமல்போன சிலைகளை மீட்பதில் துரிதமான பணிகளை மேற்கொண்டார். இதன் அடிப்படையில் இந்தாண்டு மட்டும் 45 பேர் கைது செய்யப்பட்டு, 259 சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் இந்தியாவிலேயே முதல்முறையாக சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு டிஜிட்டல் டோக்கன்களை பரிசாக வழங்கி பாராட்டைப் பெற்றார்.

இவர் காவல் துறையில் மட்டுமல்லாது, உறுப்பு தானம் தொடர்பாக நாடு முழுவதும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். மேலும் உடற்தகுதியை கட்டுக்கோப்புடன் வைத்துக்கொள்வதில் ஆர்வம் கொண்ட ஜெயந்த் முரளி, மாராத்தான் போட்டிகளில் பங்கேற்று பல சாதனைகளையும் புரிந்துள்ளார்.

அரை மாரத்தான் மற்றும் முழு மாரத்தான் போட்டிகளில் பங்கேற்று ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனையிலும் இடம் பெற்றுள்ளார். இதுமட்டுமின்றி இவர் பல புத்தகங்களையும் எழுதி வெளியிட்டுள்ளார். முன்னாள் டிஜிபி வால்டர் தேவாரத்தின் வாழ்க்கை வரலாறு, 42 Mondays, Soliloquies on Future Policing & Enkindling the Endorphins of Endurance உள்ளிட்ட பல புத்தகங்களை எழுதி வெளியிட்டுள்ளார்.

மேலும் தமிழ்நாடு காவல்துறையில் மெச்சத்தகுந்த பணிக்கான ஜனாதிபதி காவல் பதக்கம், திறம்பட பணியாற்றியமைக்கான முதலமைச்சர் பதக்கம் ஆகியவற்றையும் பெற்றுள்ளார். இந்த நிலையில் இன்று (டிச.30) தமிழ்நாடு காவல் துறையில் இருந்து ஓய்வு பெறுகிறார், ஜெயந்த் முரளி. இதற்கான அணிவகுப்பு மரியாதையை ஜெயந்த் முரளி ஏற்றுக் கொண்டார். இந்த நிகழ்வில் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு கலந்து கொண்டார்.

இதையும் படிங்க: குரோம்பேட்டையில் செயின் பறிப்பு.. செயல்படாத சிசிடிவியால் சிக்கல்!

Last Updated : Dec 30, 2022, 10:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.