ETV Bharat / state

முதலமைச்சருடன் காவல் துறை ஆலோசனை - பொறுப்பு காவல் அதிகாரிகள் நியமனம் - பொறுப்பு காவல் அதிகாரிகள் நியமனம்

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் காவல் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெறுவதையொட்டி மண்டலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு பொறுப்பு காவல் அதிகாரிகளை நியமித்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

முதலமைச்சருடன் காவல் துறை ஆலோசனை
முதலமைச்சருடன் காவல் துறை ஆலோசனை
author img

By

Published : Mar 9, 2022, 9:23 AM IST

சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஐஏஎஸ், ஐபிஎஸ், வனத்துறை அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் வருகிற 10ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் காவல் துறைக்குத் தேவையான நிதி உதவி, தேவைப்படும் திட்டங்கள், செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது.

நான்கு நாள்கள் தமிழ்நாடு முழுவதும் மண்டல ஐஜி-க்கள், டிஐஜிக்கள், மாவட்ட எஸ்பி-க்கள், மாநகர காவல் ஆணையர்கள் கூட்டத்தில் கலந்துகொள்வதால் மாவட்டத்தில் நிர்வாக பணிகள் பாதிக்கப்படாமல் இருக்க அனைத்து மண்டலங்கள் மற்றும் சரகங்கள், மாவட்டங்களுக்கு சென்னையிலுள்ள பல்வேறு பிரிவுகளில் பணியாற்றும் ஐஜி-க்கள், எஸ்பி-க்களை பொறுப்பு அதிகாரிகளாக நியமித்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதன்படி வடக்கு மண்டலத்திற்கு காவல் பயிற்சிக் கல்லுாரி ஐஜி-யாக பணியாற்றும் அருண், மத்திய மண்டலத்திற்கு ஆயுதப்படை ஐஜி-யாக பணியாற்றும் எழிலரசன், மேற்கு மண்டலத்திற்கு தொழில்நுட்ப பிரிவு ஐஜி-யாக பணியாற்றும் ராஜேஸ்வரி, தெற்கு மண்டலத்திற்கு தமிழ்நாடு காவல் அகாடமி ஐஜி-யாக பணியாற்றும் பாஸ்கரன் ஆகியோர் பொறுப்பு அதிகாரிகளாக இருப்பார்கள்.

ஆவடி 5ஆவது பட்டாலியன் கமாண்டன்டாக பணியாற்றும் எஸ்பி ராதாகிருஷ்ணன் காஞ்சிபுரம் சரகத்திற்கும், அறிவுசார் உரிமை பாதுகாப்பு பிரிவு எஸ்பி-யாக பணியாற்றும் அசோக்குமார் விழுப்புரம் சரகத்திற்கும், காவல் பயிற்சி பள்ளி எஸ்பி-யாக பணியாற்றும் மணிவண்ணன் வேலுார் சரகத்திற்கும், திருச்சி மாநகர துணை ஆணையராக பணியாற்றும் சக்திவேல் தஞ்சை சரகத்திற்கும், மதுரை வடக்கு துணை ஆணையர் ராஜசேகரன் திருச்சி சரகத்திற்கும், மதுரை சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் தங்கதுரை மதுரை சரகத்திற்கும் பொறுப்பு அதிகாரிகளாக இருப்பார்கள்.

மதுரை தலைமையிட துணை ஆணையர் ஸ்டாலின் திண்டுக்கல் சரகத்திற்கும், நெல்லை மாநகர துணை ஆணையர் சுரேஷ்குமார் நெல்லை சரகத்திற்கும், துாத்துக்குடி பேராவூரணி காவல் பயிற்சிக் கல்லுாரி முதல்வராக பணியாற்றும் ராஜராஜன் துாத்துக்குடி சரகத்திற்கும், கோவை தலைமையிட துணை ஆணையராக பணியாற்றும் செல்வராஜ் கோவை மாவட்டத்திற்கும், கோவை மாநகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் ஜெயச்சந்திரன் ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களுக்கும், ஈரோடு அதிரடிப்படையில் பணியாற்றும் மோகன்ராஜ் கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களுக்கும், சேலம் மாநகர வடக்கு துணை ஆணையர் மாடசாமி சேலம் மாநகரம் மற்றும் மாவட்டத்திற்கும் பொறுப்பு அதிகாரிகளாக பணியாற்றுவார்கள்.

திருச்சி தெற்கு மாநகர துணை ஆணையர் முத்தரசு திருச்சி மாநகரத்திற்கும், சேலம் மாநகர வடக்கு துணை ஆணையர் மாடசாமி சேலம் மாநகரம் மற்றும் சேலம் மாவட்டத்திற்கும், கோவை மாநகர தெற்கு துணை ஆணையர் உமா கோவை மாநகரத்திற்கும், திருப்பூர் மாநகர வடக்கு துணை ஆணையர் அரவிந்த் திருப்பூர் மாநகரத்திற்கும், மதுரை மாநகர போக்குவரத்து பிரிவு துணை ஆணையர் ஆறுமுகசாமி மதுரை மாநகரத்திற்கும், நெல்லை மேற்கு துணை ஆணையர் சுரேஷ்குமார் நெல்லை மாநகரத்திற்கும் பொறுப்பு அதிகாரிகளாக பணியாற்றுவார்கள்.

இவர்கள் 8ஆம் தேதி முதல் வருகிற 13ஆம் தேதிவரை சட்டம், ஒழுங்கு உள்ளிட்ட பணிகளை கண்காணிக்க வேண்டும். சட்டம் ஒழுங்கு தொடர்பாக ஏதாவது முக்கிய பிரச்சினை ஏற்பட்டால் பொறுப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டிருப்பவர்கள் உடனடியாக சம்பவ இடங்களுக்குச் சென்று பாதுகாப்பு ஏற்பாடுகளையும், தேவையான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். இதேபோல மாவட்டங்களில் கூடுதல் எஸ்பி-க்களாக பணியாற்றுபவர்கள் தாங்கள் ஏற்கனவே பணியாற்றும் பிரிவுகளுடன் சட்டம் ஒழுங்கு பணிகளையும் கவனிக்க வேண்டும். இவர்கள் விடுமுறை ஏதும் எடுக்கக்கூடாது என்று தமிழக காவல் துறை டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: தமிழ்நாடு காவல்துறையில் 21% பெண்கள் - டிஜிபி சைலேந்திரபாபு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.