சென்னை: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனைப் பதவி விலகக்கோரி சென்னை வருமான வரி அலுவலகத்தில் ஜிஎஸ்டி துணை ஆணையர் பாலமுருகன் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.
ஆத்தூர் அடுத்த அப்பம்மாசமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட இராமநாயகன் பாளையம் கிராமம், காரமடை திட்டு பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கண்ணையன் மற்றும் கிருஷ்ணன் சொந்தமாக 6.5 ஏக்கர் நிலம் குறித்த விவகாரத்தில் சாதிப்பெயருடன் அவர்களுக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மன் தொடர்பாக சிபிஐ விசாரணை செய்யவும், மத்திய நிதியமைச்சர் பதவி விலக வேண்டும். எனவும், ஜி.எஸ்.டி துணை ஆணையர் பாலமுருகன் முன்னதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்குக் கடிதம் அனுப்பியிருந்தார்.
மேலும், இந்த சம்மனை அனுப்பியது அமலாக்கத்துறையின் உதவி இயக்குநர் ரித்தேஷ் குமார் இவர்களிடம் தொடர்ந்து பண மோசடி வழக்கில் விசாரணை மேற்கொண்டுள்ளார். சென்னை சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரான தங்களை, அமலாக்கத்துறை அதிகாரிகள் மிரட்டியதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்நிலையில் இது குறித்துப் பேசிய ஜி.எஸ்.டி துணை ஆணையர் பாலமுருகன், "பாஜக அமலாக்கத்துறையைத் தனது ஒரு ஆயுதமாகக் கையாளுகிறது. இதற்குப் பொறுப்பேற்று, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என தொடர்ந்து குடியரசுத் தலைவருக்கும், பிரதமருக்கும் கடிதம் எழுதி வந்த நிலையில் இது தொடர்பாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இது குறித்து எதுவும் கூறவில்லை, "பாஜக அரசு தொடர்ந்து ஏழை விவசாயிகளைத் துன்புறுத்து வருகிறது. இதனால், உழவர் தினத்தன்று நான் உண்ணாவிரதம் இருக்கிறேன்" என கூறியுள்ளார்.
இதற்கு முன்னதாக பாலமுருகன் ஈடிவி பாரத்-திடம் கூறுகையில், "முன்பெல்லாம் அமலாக்கத்துறையில் நேர்மையான அதிகாரிகளை நியமிப்பார்கள். மேலும், எங்களுக்கு அரசியல் தலைவர்களின் தலையீடுகள் எதுவும் இருக்காது. தற்போது, ஏழை தலித் விவசாயிகள் கண்ணையன் மற்றும் கிருஷ்ணன் 6.5 ஏக்கர் நிலம் வைத்திருந்தாலும், இவர்களால் கடந்த 4 ஆண்டுகளாக அந்த நிலத்தில் விவசாயப் பணிகளும் மேற்கொள்ள முடியவில்லை.
இதற்குக் காரணம், பாஜக நிர்வாகி குணசேகரன் என அவர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்துள்ளனர். இந்த நிலத்திற்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய விதம் சரியானதாக இல்லை. நிர்மலா சீதாராமன் நிதி அமைச்சர் ஆன பிறகே இது போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகிறது" என தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சாதிப்பெயருடன் விவசாயிகளுக்கு சம்மன்.. சிபிஐ விசாரிக்க ஐஆர்எஸ் அதிகாரி கடிதம்!