ETV Bharat / state

நிபா வைரஸ் - அறிகுறிகள் என்னென்ன? - nipah virus precautionary measures

நிபா வைரஸ் குறித்து தமிழ்நாட்டில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கைகள் தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை பொது சுகாதாரத் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

vcxv
cvx
author img

By

Published : Sep 6, 2021, 12:16 PM IST

சென்னை: நிபா வைரஸ் குறித்து தமிழ்நாட்டில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கைகள் தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை பொது சுகாதாரத்துறை சார்பில் இன்று (செப்.6) வெளியிடப்பட்டுள்ளது.

நிபா வைரஸ் கடந்த 2018ஆம் ஆண்டு கேரளா மாநிலம் கோழிக்கோட்டில் கண்டறியப்பட்டு மாநிலம் முழுவதும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. தற்போது இந்த வைரஸ் மீண்டும் பரவ தொடங்கி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

நிபா வைரஸின் முக்கிய அறிகுறிகள்

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாடு - கேரளா எல்லைப் பகுதிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள்படி காய்ச்சல், தலைவலி , மயக்கம் , சுவாசப் பிரச்சினை , மனநல பிரச்சினை ஆகியவை நிபா வைரஸின் முக்கிய அறிகுறிகளாகும். அறிகுறிகள் கண்டறியப்படும் நோயாளிகள் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் 21 நாட்கள் தனிமைப்படுத்துதல் அவசியம் ஆகும்.

எல்லை பகுதிகள் தீவிர கண்காணிப்பு

கேரளா பகுதியை ஒட்டிய கன்னியாகுமரி , தென்காசி , தேனி , நீலகிரி , கோவை, மற்றும் திருப்பூர் ஆகிய ஆறு மாவட்டங்களின் எல்லைப் பகுதிகளை தீவிரமாக கண்காணிக்க சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. அறிகுறிகள் கண்டறியப்பட்ட நோயாளிகள் உடனடியாக பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். பரிசோதனையின் முடிவுகளை தொடர்ந்து சுகாதாரத் துறைக்கு உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும். சுகாதாரத் துறையினர் நோயாளிகளை கையாளும்போது உரிய பாதுகாப்பு கவசம் அணிந்து பரிசோதனை மேற்கொள்ள அறியுறுத்தப்பட்டுள்ளது.

நோய் அறிகுறி உள்ளவர்களுக்கு ரத்தம், தொண்டை சளி, சிறுநீர் மாதிரிகள் எடுக்க வேண்டும். நோயாளிகளிடம் இருந்து எடுக்கப்படும் மாதிரிகள் இரண்டு முதல் எட்டு டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் பாதுகாக்கப்பட்டு 48 மணி நேரத்திற்குள் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட வேண்டும். கேரளாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு வரும் அனைவருக்கும் தொடர்ந்து பொதுவான அறிகுறிகள் இருக்கிறதா என்பதை கண்காணித்து உடனுக்குடன் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட மாவட்ட சுகாதாரத் துறை அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மீண்டும் நிபா: 2 பேருக்கு அறிகுறி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.