சென்னை : குடும்ப அட்டைதாரர்களுக்கு தடையின்றி அத்தியாவசியப் பொருட்கள் வழங்க வேண்டும் என அனைத்து நியாயவிலைக் விற்பனையாளர்களுக்கும் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து நுகர்வோர் பாதுகாப்புத்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்கும்போது விற்பனை முனைய இயந்திரத்தில் கைரேகை பதிவு செய்வதில் தொழிநுட்ப கோளாறுகள் ஏற்படுவதால் நியாயவிலைக்கடை செயல்பாடுகள் குறைந்துள்ளது.
QR குறியீடு அங்கீகரிக்கப்படாத நேர்வுகளில் விற்பனை முனைய இயந்திரத்தில் குடும்ப அட்டை எண்ணை பதிவு செய்து, உரிய பதிவேட்டில் ஒப்புதலைப் பெறவேண்டும் என அனைத்து நியாயவிலைக் விற்பனையாளர்களுக்கும் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அறிவுறுத்தியுள்ளது.
மேலும், குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை தடையின்றி உடனடியாக வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது.
இதையும் படிங்க : 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கட்டாயம் - அமைச்சர் அன்பில் மகேஷ்