சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் 150-க்கும் மேற்பட்ட இடங்களில் திமுக முன்னிலை பெற்றுள்ள நிலையில் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கட்சி அலுவலகத்தில் எந்தக் கொண்டாட்டங்களும் நடத்தப்படவில்லை.
அதனைத் தொடர்ந்து, திமுக தலைவர் ஸ்டாலின் இல்லம் முன்பு தொண்டர்கள் இனிப்பு வழங்கியும் கோஷம் எழுப்பியும் உற்சாகமாகக் கொண்டாடுகின்றனர்.
இந்நிலையில், மு.க. ஸ்டாலின் தனது இல்லத்தில் இருக்கிறார். அவருடன் திமுக எம்பிக்கள் கனிமொழி, தயாநிதி மாறன், டி.ஆர். பாலு, திருச்சி சிவா உள்ளிட்டோர் உள்ளனர். கரோனா எச்சரிக்கை காரணமாக, பொதுமக்களின் நலன்கருதி அவரது இல்லத்துக்கு அருகே பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.