ETV Bharat / state

காங்கிரஸ் கட்சியின் மாவட்ட செயலாளர் தாக்கப்பட்டத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்! - வண்ணாரப்பேட்டை காங்கிரஸ் கட்சி

சென்னை: வண்ணாரப்பேட்டையில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட செயலாளர் நாகராஜ் தாக்கப்பட்டதை கண்டித்து அக்கட்சியின் காவல் நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Congress party members protest
Congress party members protest
author img

By

Published : Jun 15, 2021, 3:57 PM IST

சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில் நேற்று (ஜூன் 14) மாலை காங்கிரஸ் கட்சியின் வடசென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் நாகராஜ், சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது, அவர் எதிரே வந்த அடையாளம் தெரியாத நபர்கள் அவரை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இதனைத் தொடர்ந்து நாகராஜ் வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் வடசென்னை காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் திரவியம் தலைமையில் வடசென்னை பகுதியை சார்ந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறை உயர் அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.