ETV Bharat / state

தமிழக மீனவர்களை பாதுகாக்க தனிப்படை அமையும் - திருமாவளவன் - இலங்கை கடற்படையை கண்டித்து கண்டன ஆர்பாட்டம்

சென்னை: தமிழக மீனவர்களை பாதுகாக்க தனிப்படை அமையும் எனவும்; இதற்கு வைகோ உறுதுணையாக இருப்பார் எனவும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Demonstration
Demonstration
author img

By

Published : Jan 25, 2021, 2:37 PM IST

Updated : Jan 25, 2021, 3:04 PM IST

இலங்கை கடற்படையால் 4 மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்து வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கலந்துகொண்டு பேசுகையில், இலங்கை கடற்படைகள் 4 மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு எதிர்வினை ஆற்ற வேண்டும் என்பதற்காக கரோனா ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம்.

தமிழ்நாட்டு மீனவர்கள் 40 ஆண்டுகளில் 800 பேர் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். இவர்கள் ஈழத் தமிழர்களோ, இனவெறி போராட்டத்தில் ஈடுபட்டவர்களோ அல்ல. தங்களின் வாழ்வாதாரத்திற்காக கடலுக்குள் சென்றவர்கள். இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை மீறியவர்களும் அல்ல. இலங்கை கடற்படை தமிழ்நாட்டு மீனவர்களின் படகுகளுடன் நேரடியாக மோதி தீ வைத்து கொளுத்தியுள்ளனர்.

ஆனால் இதுபோன்ற பயங்கரவாதத்திற்கு எதிராக சிங்கள அரசிற்கு எதிராக மத்திய அரசு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுவரை அப்பாவி தமிழர்களை சுட்டு கொன்றார்கள் என முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யவில்லை. சீனப்படையினருடனும், பாகிஸ்தான் படையினர் உடன் அடிக்கடி மோதிக்கொள்ளும் இந்திய கடற்படை, இலங்கை கடற்படையுடன் மோதி கொள்ளவில்லை என்பதை எண்ணி பார்க்க வேண்டும்.

Demonstration
கண்டன ஆர்பாட்டத்தில் வைகோ

இலங்கை அரசு எத்தனை மீனவர்களை கொன்றாலும், ஈழத்தமிழர்களை கொன்றாலும் அவர்களுடன் மோதுவது இல்லை என்ற வெளியுறவு கொள்கையை இந்திய அரசு கொண்டுள்ளது. பாகிஸ்தான், சீனாவை பகைத்துக்கொள்ளும் அளவிற்கு இலங்கையை பகைத்துக் கொள்ளாமல் நட்புறவுடன் இருக்கிறது. இலங்கை அரசால் இந்தியாவின் பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் எந்தவித பலனும் இல்லை. இலங்கை அரசு இந்தியாவின் பகை நாடுகளுடன் நட்புறவுடன்தான் இருக்கிறது.

பாஜக ஆட்சிக்கு வந்து 7 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் ஏழு பேர் விடுதலை குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. பாஜக ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டில் மாற்றம் ஏற்படும் என்று பரப்புரை செய்தனர். இதில் ஒரு அங்குலம்கூட நடக்கவில்லை.

இந்தியாவில் இந்துக்கள் பாதிக்கப்பட்டால் பாஜகவினர் குரல் எழுப்புகின்றனர். ஆனால் இலங்கையில் உள்ள தமிழர்கள், இந்துக்கள் பாதிக்கப்பட்டால் குரல் கொடுக்கவில்லை. மோடி அரசு கார்ப்பரேட் அரசு என்றால் எடப்பாடி அரசு ஒரு பொம்மலாட்ட அரசு. தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் தேவைப்படுகிறது. புதுடெல்லியில் ஜனநாயக அடிப்படையிலான ஒரு அரசு உருவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. புது டெல்லியில் நாளை (ஜனவரி 26) விவசாயிகள் பேரணி நடத்துகின்றனர் .

இந்த பேரணியில் திசை திருப்புவதற்கு வடமாநிலத்தில் வேறு பிரச்னையை உருவாக்குவார்களா? என தெரியவில்லை. மத்திய அரசின் விவசாய சட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டேன் என கேரளா அரசு கூறுகிறது. ஆனால் தமிழ்நாடு அரசு இது போன்று எடுத்துக்கூறவில்லை.

இவர்கள் ஒரு போதும் சிங்கள இனவெறிக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க மாட்டார்கள். தமிழ்நாட்டு மீனவர்களை பாதுகாக்க மாட்டார்கள். தமிழ்நாட்டு மீனவர்களை பாதுகாக்க தனிப்படை அமையும். இதற்கு வைகோ உறுதுணையாக இருப்பார். விடுதலைச் சிறுத்தைகளும் உறுதுணையாக இருக்கும்” என தெரிவித்தார்.

Last Updated : Jan 25, 2021, 3:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.