ETV Bharat / state

சாவித்திரி பாய் புலே பிறந்த தினத்தில் ஆசிரியர் தினம் கொண்டாட கோரிக்கை! - Savitri Bai Phule

இந்தியாவின் முதல் பெண் ஆசிரியை சாவித்திரி பாய் புலே பிறந்த நாளில் ஆசிரியர் தினத்தைக் கொண்டாட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

demand-raised-to-celeberate-teachers-day-in-savitri-bai-phule-birthday
சாவித்திரி பாய் புலே பிறந்த தினத்தில் ஆசிரியர் தினம் கொண்டாட கோரிக்கை!
author img

By

Published : Sep 5, 2021, 6:13 PM IST

சென்னை: இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் சாவித்திரி பாய் புலே. மகாராஷ்டிராவைச் சேர்ந்த இவர், சமூக சீர்திருத்தவாதியாகவும், கல்வியாளராகவும், கவிஞராகவும் திகழ்ந்தார்.

1831ஆம் ஆண்டு ஜனவரி 3ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலம், சதாரா மாவட்டத்திலுள்ள நைகான் என்ற சிற்றூரில் விவசாய குடும்பத்தில் பிறந்தார்.

சாவித்திரி பாய் புலேவுக்கு 9 வயதில், 13 வயதான ஜோதிராவ் புலேவுடன் திருமணம் செய்துவைக்கப்பட்டது. மகாராஷ்டிராவின் மிகப்பெரிய சமூக சீர்திருத்தவாதிகளில் ஒருவராக விளங்கியவர், ஜோதிராவ் புலே.

எனவே, தனது மனைவி சாவித்திரி பாயை சாதிய, பெண் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் தன்னுடன் இணைத்துக் கொண்டார்.

பெண்களுக்காக முதல் பள்ளி

திருமணத்திற்குப்பின் ஜோதிராவ், தன் மனைவி சாவித்திரிக்குப் படிக்கவும், எழுதவும் கற்றுக் கொடுத்தார்.

சாவித்திரி பாய் கற்பிப்பதில் ஆர்வம் கொண்டிருந்ததால், பின் அகமதுநகரிலுள்ள ஒரு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்தார்.

அதனைத்தொடர்ந்து புனேவில் மற்றொரு ஆசிரியர் பயிற்சி வகுப்பிலும் பங்கேற்று படித்தார்.

லயோலா கல்லூரியின் தமிழ்துறை பேராசிரியர் அமிர்தலெனின்

பின்னர் மகர்வாடாவில் ஒரு புரட்சிகரப் பெண்ணியலாளரும், தன் கணவரது வழிகாட்டியான சகுணா பாயுடன் சேர்ந்து சிறுமிகளுக்குக் கற்பிக்கத் தொடங்கினார்.

1848ஆம் ஆண்டில் சாவித்திரி பாய், ஜோதிராவ் மற்றும் சகுணா பாய் ஆகியோர் இந்தியாவில் சிறுமிகளுக்கான முதல் பள்ளியைத் தொடங்கினர்.

கல்விப்புரட்சி

தொடங்கப்பட்ட முதல் பெண்கள் பள்ளியில் 9 மாணவர்கள் மட்டுமே படித்தனர். ஆசிரியராக பொறுப்பேற்ற சாவித்திரி பாய், சிறுமிகள் படிப்பைத் தொடர ஊக்கத் தொகையும் வழங்கினர்.

தாெடர்ந்து சிறுமிகளுக்காக மேலும் 18 பள்ளிகளை, அடுத்தடுத்து தொடங்கி கல்விப் புரட்சியை ஏற்படுத்தினார்.

demand-raised-to-celeberate-teachers-day-in-savitri-bai-phule-birthday
சாவித்திரி பாய் புலே பிறந்த தினத்தில் ஆசிரியர் தினம் கொண்டாட கோரிக்கை!

அத்தகைய புரட்சிக் கருத்துகளுடன் இருந்த சாவித்திரி பாய் புலே பெயரில் கல்விக்கான விருதுகளை வழங்க வேண்டும் எனத் தற்போது கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.

தமிழ்த்துறை பேராசிரியர் கருத்து

இதுதொடர்பாக பேசிய லயோலா கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியர் அமிர்தலெனின், "இந்தியக் கல்வி வரலாற்றில் அறிவுபேராளுமைகளாக விளங்கியவர்களில் ஜோதிராவ் புலேவும், சாவித்திரிபாய் புலேவும் மறக்கமுடியாதவர்கள்.

இந்தியா வர்ணஸ்ரமத்தில் மூழ்கிக் கிடந்த காலத்திலேயே, இளம் விதவைப் பெண்களுக்கும், கல்வியைக் கற்க விரும்பிய பெண்களுக்கும் கல்வியைக் கற்பித்தவர்கள். பெண்களுக்கு எனப் பள்ளியைத் தொடங்கி, கல்வியை அளித்தவர்கள்.

இந்த சனாதான சமூகத்தால் பெண்கள் முடக்கப்பட்ட காலத்தில் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட பெண்களுக்கு விடிவு, கல்விதான் என்பதை உணர்ந்து செயல்பட்டவர்.

எனவே, சாவித்திரிபாய் புலேவின் பிறந்த நாளினை ஆசிரியர்கள் தினமாக கொண்டாடலாம்.

தற்பொழுது நவீன தொழில்நுட்பங்கள் வளர்ந்திருந்தாலும், பெண்கள் கல்வி பயில்வதில் தடைகள் இருந்து கொண்டுதான் இருக்கின்றன.

எனவே, பெண்களின் கல்வி வளர்ச்சிக்கும், ஆளுமை அதிகாரத்திற்கும் பணியாற்றும் ஆசிரியைகளை கண்டறிந்து அவர்களுக்கு ஒன்றிய, மாநில அரசுகள் விருதுகளை வழங்கி கவுரவிக்க வேண்டும். சாவித்திரி பாய் புலே அன்றைய காலகட்டத்தில் பல்வேறு சிரமங்களுக்கு இடையில் பாடங்களைக் கற்பித்தவர் என்பது வரலாறு.

தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக் கழகத்திற்கு ஜோதிபாய் புலே, சாவித்திரி பாய் புலே ஆகியோரின் பெயரை வைக்க வேண்டும். இதன் மூலம் ஆசிரியர்களுக்கு இவர்களின் வரலாறு தெரிவதுடன், அர்ப்பணிபுடன் கற்பிக்கவும் முடியும்" என்றார்.

புலே பெயரில் ஆசிரியர்களுக்கு விருது

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகப் பேராசிரியர் சாமுவேல் ஆசீர் ராஜ் இதுதொடர்பாக பேசுகையில், "பெண்களின் படிப்பிற்காக பல்வேறு எதிர்ப்புகளை மீறி, கற்பித்தவர் சாவித்திரி பாய் புலே. அவர், மாலி சமுதாயத்தில் பிறந்து திருமணம் செய்யும் வரையில், படிப்பறிவு இல்லாமல் இருந்தார்.

demand raised to celeberate teachers day in Savitri Bai Phule birthday
சாமுவேல் ஆசீர் ராஜ்

ஜோதிராவ் புலே பெண்களைப் படிக்க வைக்க வேண்டும் என விரும்பியவர். திருமணத்திற்குப் பின்னர் முதலில், தனது மனைவிக்குப் பள்ளி ஆசிரியையாக பயிற்சி அளிக்கிறார்.

அதனைத் தொடர்ந்து சாவித்திரி புலே பெண்களை அழைத்துக் கல்வி கற்பித்தார். 19ஆம் ஆண்டு நூற்றாண்டிலேயே மாணவிகள்-பெற்றோர் கூட்டம் நடத்தியதுடன், ஊக்கத்தொகையும் வழங்கி உள்ளார்.

எனவே, ஆசிரியர் தினத்தை முழுவதுமாக சவுத்திரி பாய் புலே பிறந்த தினத்தில் கொண்டாடுவதுடன், விருதுகளையும் வழங்க வேண்டும்" என வலியுறுத்தினார்.

இதையும் படிங்க: ரூபாய் நோட்டில் சாவித்ரிபாய் பூலே படம் - ரவிக்குமார் எம்.பி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.