ETV Bharat / state

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பு!

டெல்லி அவசரச் சட்ட விவகாரத்தில் ஆதரவு கோரி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் முதலமைச்சர் பக்வந்த் மான் உள்ளிட்டோர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

CM
CM
author img

By

Published : Jun 1, 2023, 5:37 PM IST

Updated : Jun 1, 2023, 6:05 PM IST

சென்னை : டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் முதலமைச்சர் பக்வந்த் மான் ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தனர். தலைநகர் டெல்லியில் மத்திய அரசு கொண்டு வந்த அவசர சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க, அனைத்து மாநில முதலமைச்சர்களிடம் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆதரவு திரட்டி வருகிறார்.

முன்னதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், மகாராஷ்டிரா சிவ சேனா தலைவர் உத்தவ் தாக்ரே, தேசியவாத காங்கிராஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், தெலங்கானா முதலமைச்சர் கே.சந்திரசேகர ராவ், கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூசி உள்ளிட்டோரை அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் முதலமைச்சர் பக்வந்த மான் ஆகியோர் சந்தித்து மத்திய அரசு கொண்டு வந்த டெல்லி அவசரச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க ஆதரவு திரட்டி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு வந்த டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் முதலமைச்சர் பக்வந்த் மான், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தனர். டெல்லி அவசரச் சட்டம் குறித்து இரு தரப்பும் தீவிர ஆலோசனை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

  • Delhi CM and AAP national convener Arvind Kejriwal & Punjab CM Bhagwant Mann meet Tamil Nadu CM and DMK president MK Stalin in Chennai. The two AAP leaders are meeting CM Stalin to seek support on the Centre's ordinance issue. pic.twitter.com/FIrGXKor2K

    — ANI (@ANI) June 1, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதன் பின்னர் செய்தியாளர்களை மூவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய மு.க.ஸ்டாலின், கெஜ்ரிவாலுடனான சந்திப்பு கடந்த வாரமே நடந்திருக்க வேண்டும் என கூறினார். தனது வெளிநாட்டு பயணத்தின் காரணமாக சந்திப்பு தாமதமாகியதாக கூறிய முதலமைச்சர் ஸ்டாலின், தற்போது ஆக்கபூர்வமான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக கூறினார்.

இதே போன்று ஜூன் 12ம் தேதி நிதிஷ் குமாரால் கூட்டப்படும் எதிர்க்கட்சிகளின், கூட்டத்தில் தன்னால் பங்கேற்க முடியாது என கூறிய ஸ்டாலின், அன்றைய தினம் மேட்டூர் அணையில் நீர் திறக்க வேண்டியதிருப்பதை சுட்டிக்காட்டினார். எனவே வேறு தேதியில் அனைத்துக்கட்சி கூட்டத்தை நடத்துமாறு வலியுறுத்தியுள்ளதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் அவசரச் சட்டத்தை நாடாளுமன்ற மாநிலங்களவையில் தோற்கடிக்க வேண்டும் என வலியுறுத்தினார். இது நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை மக்களுக்கும், பாஜகவுக்கும் காண்பிக்கும் எனஅவர் கூறினார்.

நிறைவாக செய்தியாளர்களிடம் பேசிய பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான். தமிழ்நாட்டில் இருப்பதைப் போலவே பஞ்சாபிலும் ஆளுநரின் செயல்பாடுகள் இருப்பதாக குற்றம் சாட்டினார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் செயல்பாடுகளை ஆளுநர் மதிப்பதில்லை எனவும் கூறிய அவர், நாடு முழுவதும் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை அவசியம் என கூறினார்.

இதையும் படிங்க : Z plus பாதுகாப்பை மறுக்கும் பக்வந்த் மான்... பஞ்சாப் முதலமைச்சரின் திட்டம் என்ன?

Last Updated : Jun 1, 2023, 6:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.