ETV Bharat / state

கரோனா தாக்கம்: தமிழ்நாடு அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து பதிலளிக்க உத்தரவு - கரோனா தாக்கம்

சென்னை: கரோனா தாக்கத்தின் தற்போதைய நிலை, ஆக்சிஜன் இருப்பு, ரெம்டெசிவிர் மருந்து கள்ள சந்தையில் விற்பதை தடுக்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

MHC
MHC
author img

By

Published : May 5, 2021, 6:42 PM IST

கரோனா தாக்கம் தீவிரம் அடைந்ததை அடுத்து ரெம்டெசிவிர் மருந்து பற்றாக்குறை, ஆக்சிஜன் வெளிமாநிலங்களுக்கு அனுப்புவது, தடுப்பூசி பற்றாக்குறை உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக பத்திரிகைச் செய்தியின் அடிப்படையில் தாமாகவே முன்வந்து சென்னை உயர் நீதிமன்றம் வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் இன்று (மே 5) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இருந்தாலும், அலுவலர்கள் இருப்பதனால் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்பதை அவர்கள் தெரிவிக்க வேண்டும் என கூறிய தலைமை நீதிபதி, இது தொடர்பாக சுகாதாரத் துறை செயலர் விவரங்களை பெற்று தெரிவிக்கும்படி தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞருக்கு உத்தரவிட்டார். மேலும் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி எப்போது தொடங்கப்படும் என தலைமை நீதிபதி மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த மத்திய அரசு தரப்பில் ஆஜராகியிருந்த கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், தமிழ்நாட்டிற்கு ஏப்ரல் 21ஆம் தேதி முதல் மே 9ஆம் தேதி வரையிலான காலகட்டத்திற்கு ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 500 ரெம்டெசிவிர் மருந்துகள் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளதாக குறிப்பிட்டார். ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜனை உற்பத்தி செய்வது குறித்து விளக்கம் அளிப்பதாக அவர் தெரிவித்தார்.

தற்போதைய நிலையில் நாளை மறுநாள் (மே 7) புதிய அரசு பதவியேற்று, புதிய அரசு தரப்பு வழக்கறிஞரை நியமிக்க இரண்டு நாள்கள் அவகாசம் எடுத்துக்கொள்ளும் என தெரிவித்த தலைமை நீதிபதி, தற்போதுவரை எடுத்து இருக்கக்கூடிய சமீபத்திய நடவடிக்கைகள் குறித்த விவரங்களை சுகாதாரத் துறை செயலர் இடம்பெற்று தெரிவிக்கும்படி அரசு தரப்பு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு விசாரணையை நாளை (மே 6) ஒத்தி வைத்திருக்கிறார்.

மேலும், தேர்தல் வெற்றிக் கொண்டாட்டங்களை சிறிது காலம் தள்ளி வைக்க வேண்டும் என்று திமுக தரப்புக்கு தலைமை நீதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார். முன்னதாக, பட்டாசுகள் வெடிக்கக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், தொலைக்காட்சி பத்திரிகைகளில் திமுகவினரின் கொண்டாட்டங்கள் குறித்த செய்திகள் வெளியானதை தலைமை நீதிபதி சுட்டிக்காட்டினார்.

அதற்கு பதிலளித்த மூத்த வழக்கறிஞர் வில்சன், உடனடியாக காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு இந்த கொண்டாட்டங்கள் உடனடியாக நிறுத்தப்பட்டு விட்டதாகவும், கொண்டாட்டங்கள் கூடாது என்று கட்சித் தலைவரே அறிக்கை வெளியிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இது தவிர கரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்த கோரியும், தமிழ்நாடு முழுவதும் சித்தா, ஆயுர்வேதா கிளினிக்குகள் அமைக்கக் கோரியும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளைக் கவனிக்க உறவினர்களை அனுமதிக்கக்கூடாது என கோரியும் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை, இந்த வழக்குடன் சேர்த்து பட்டியலிட உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நாளை (மே 6) தள்ளி வைத்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.