ETV Bharat / state

சென்னையில் குறைந்து வரும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள்!

சென்னை : மாநகராட்சியின் 15 மண்டலங்களில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 23ஆகக் குறைந்துள்ளது.

decreasing_containment_zones_in_chennai
decreasing_containment_zones_in_chennai
author img

By

Published : Aug 8, 2020, 6:39 PM IST

தமிழ்நாட்டில் கரோனா தொற்றால் இதுவரை இரண்டு லட்சத்து 85 ஆயிரத்து 24 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் சென்னையில் மட்டும் ஒரு லட்சத்து ஏழாயிரத்து 109 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை சென்னையில் மட்டுமே 93 ஆயிரத்து 231 பேர் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். கரோனா தொற்று பரவத் தொடங்கிய ஆரம்பக் காலக் கட்டத்தில், சென்னையில் மட்டும் 300க்கும் மேற்பட்ட கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இருந்தன.

அவை தற்போது படிப்படியாகக் குறைந்து இன்று ஆறாவது மண்டலத்தில் ஒரு கட்டுப்படுத்தப்பட்ட பகுதியும், ஏழாவது மண்டலத்தில் எட்டு கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளும், எட்டாவது மண்டலத்தில் எட்டு கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளும், ஒன்பதாவது மண்டலத்தில் ஒரு கட்டுப்படுத்தப்பட்ட பகுதியும், 10ஆவது மண்டலத்தில் நான்கு கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளும், 11ஆவது மண்டலத்தில் ஒரு கட்டுப்படுத்தப்பட்ட பகுதி எனக் குறைந்துள்ளது.

இதனால் தற்போது சென்னையில் உள்ள கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 23ஆகக் குறைந்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.