ETV Bharat / state

பொதுத்தேர்வு நேரத்தில் மாற்றம் - அரசு தேர்வுத்துறை தகவல் - The decision of the Government Examination Department

சென்னை: 10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நேரத்தில் மீண்டும் மாற்றம் செய்து அரசுத் தேர்வுத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தேர்வுத்துறை முடிவு
author img

By

Published : Oct 22, 2019, 5:46 PM IST

Updated : Oct 22, 2019, 7:02 PM IST

பள்ளிக்கல்வித்துறையில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பல்வேறு மாற்றங்களை அரசுத் தேர்வுத் துறை செய்து வருகிறது. அதன்படி 10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மதிப்பெண்கள் 1200 மதிப்பெண்களிலிருந்து 600 மதிப்பெண்களாக குறைக்கப்பட்டதால் மூன்று மணிநேரமாக இருந்த தேர்வு நேரம், இரண்டரை மணிநேரமாக குறைக்கப்பட்டது.

இது மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை கருத்தில் கொண்ட தேர்வுத்துறை தேர்வு எழுதும் நேரத்தை மீண்டும் மூன்று மணி நேரமாக அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது. அதன்படி காலை 10 மணிக்கு தொடங்கும் தேர்வானது, மதியம் ஒரு மணி வரை நடைபெறும். கூடுதலாக வழங்கும் 15நிமிடம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது.

மாணவர்களுக்கு வழக்கம்போல் வினாத்தாளை படிப்பதற்கு 10 நிமிடமும், விடைத்தாளை பூர்த்திச்செய்ய ஐந்து நிமிடமும் கூடுதலாக வழங்கப்படும். அதன் பின்னர் மாணவர்களுக்கு 3 மணிநேரம் பொது தேர்வு நடைபெறும் என அரசு தேர்வுத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் எனவும் தெரிகிறது.

இதையும் படிங்க:'5,8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு உண்டு;ஆனாலும் ஃபெயில் ஆக்க மாட்டோம்' - அமைச்சர் செங்கோட்டையன்

Intro:10,11,12 பொதுத்தேர்வு நேரத்தில் மீண்டும் மாற்றம்

Body:பொதுத்தேர்வு நேரத்தில் மீண்டும் மாற்றம்

சென்னை,10,11,12 வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு எழுதுவதற்கான நேரத்தில் மீண்டும் மாற்றம் செய்து அரசுத் தேர்வுத்துறை அறிவிக்க உள்ளது.

பள்ளிக்கல்வித்துறையில் பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பல்வேறு மாற்றங்களை அரசுத் தேர்வுத் துறை செய்து வருகிறது. அதன்படி 10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மதிப்பெண்கள் குறைக்கப்பட்டுள்ளன.
மேலும் மூன்று மணிநேரமாக இருந்த தேர்வு எழுதும் நேரத்தில் மதிப்பெண்கள் குறைத்தால் இரண்டு மணி நேரம் 30 நிமிடமாக அரசு தேர்வுத்துறை குறைத்தது.

ஆனால் மீண்டும் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு மூன்று மணி நேரமாக தேர்வு நேரத்தினை அதிகரிக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதன்படி காலை 10 மணிக்கு துவங்கும் தேர்வானது மதியம் ஒரு மணி 15 நிமிடம் வரை நடைபெறும். மாணவர்களுக்கு வழக்கம்போல் வினாத்தாளை படிப்பதற்கு 10 நிமிடமும், விடைத்தாளை பூர்த்திசெய்ய ஐந்து நிமிடமும் வழங்கப்படும். அதன் பின்னர் மாணவர்களுக்கு 3 மணிநேரம் பொது தேர்வு நடைபெறும் என அரசு தேர்வுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் எனவும் தெரிகிறது.

Conclusion:
Last Updated : Oct 22, 2019, 7:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.