முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்று ஆகஸ்ட் 14ஆம் தேதி நள்ளிரவோடு 100 நாள்கள் நிறைவடைகிறது. ஆகஸ்ட் 15 பிறக்கும் அதே நள்ளிரவில், இந்தியா விடுதலை பெற்று 75 ஆண்டுகள் ஆகின்றன. எனவே இந்தத் தொடர் நிகழ்வுகளை வரலாற்றில் பதிவு செய்யக்கூடிய விழாவாக கொண்டாட அரசு முடிவெடித்திருப்பதாகத் தெரிகிறது.
அதன்படி, ஆகஸ்ட் 15 பிறக்கும் நள்ளிரவு 12 மணியளவில் சட்டப்பேரவையில் 75ஆவது விடுதலை நாள் விழா கொண்டாட அரசு தீர்மானித்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை அரசு முழு வீச்சில் செய்துவருகிறது. இவ்விழாவில் பங்கேற்க தமிழ்நாடு ஆளுநர் அழைக்கப்படுவார் எனக் கூறப்படுகிறது.
கடந்த 1972ஆம் ஆண்டு இந்தியாவின் 25ஆவது விடுதலை நாளை, அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி நள்ளிரவில் கொண்டாட ஆணை பிறப்பித்தார். அதேபோல, 1987ஆம் ஆண்டிலும் விடுதலை நாளை முன்னிட்டு சட்டப்பேரவையில் நள்ளிரவில் சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது.
அந்த வழிவந்த ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு இந்தாண்டு நள்ளிரவில் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி விழா நடந்த முடிவுசெய்துள்ளது.
இதையும் படிங்க: 'ஆசான் அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து பேரவைக்குள் நுழைகிறேன்'