ETV Bharat / state

இனி கல்வி நிறுவனங்களில் நிகழும் மரணங்களை சிபிசிஐடிக்கு பதிலாக சம்மந்தப்பட்ட காவல்துறையினரே விசாரிக்கலாம் - நீதிமன்றம் - HC

கல்வி நிறுவனங்களில் நிகழும் இயற்கைக்கு மாறான மரணங்களை சிபிசிஐடிக்கு பதிலாக சம்மந்தப்பட்ட காவல்துறையினரே விசாரிக்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இனி கல்வி நிறுவனங்களில் நிகழும் மரணங்களை சிபிசிஐடிக்கு பதிலாக சம்மந்தப்பட்ட காவல்துறையினரே விசாரிக்கலாம்..

author img

By

Published : Oct 19, 2022, 12:13 PM IST

சென்னை: கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தமிழ்நாட்டில் கல்வி நிறுவனங்களில் நிகழும் இயற்கைக்கு மாறான மரணங்களை சிபிசிஐடி காவல்துறையினர் விசாரிக்க வேண்டும் எனவும், கல்வித்துறை அலுவலர்கள் விசாரணைக்குபின்தான் கைது நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது.

இதனால் சிபிசிஐடி காவல்துறையினரின் வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதால், இந்த உத்தரவை மாற்றியமைக்கக் கோரி காவல்துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் இந்த மனு நீதிபதி சதிஷ்குமார் முன்பு இன்று (அக் 19) விசாரணைக்கு வந்தது.

அப்போது மாநில குற்றவியல் தலைமை வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, “ஜூலை 18ஆம் தேதி உத்தரவுக்குப் பிறகு தமிழ்நாட்டில் கல்வி நிறுவனங்களில் நிகழ்ந்த 11 மரணங்கள் குறித்த வழக்குகள் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. முக்கிய வழக்குகளை விசாரிப்பதற்கென பிரத்யேகமாக சிபிசிஐடி பிரிவு உருவாக்கப்பட்டது.

எந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டுமென வழக்கின் தன்மை குறித்து டிஜிபி முடிவு செய்வார். உயர் நீதிமன்ற உத்தரவு காரணமாக சிபிசிஐடி காவல்துறையினரின் வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. கல்வி நிறுவனங்களில் நிகழும் மரணம் குறித்து கல்வித்துறை விசாரித்த பிறகே கைது நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமென்ற உத்தரவு காரணமாக, குற்றங்கள் தொடர்பான ஆதாரங்களை கலைக்க வாய்ப்புள்ளதால் இந்த உத்தரவையும் மாற்றியமைக்க வேண்டும்” என வாதிட்டார்.

இதனை ஏற்ற நீதிபதி சதிஷ்குமார், “இனி கல்வி நிலையங்களில் நிகழும் மரணங்கள் குறித்து சம்பந்தப்பட்ட காவல்துறையினரே விசாரிக்கலாம். அதேபோல் வழக்கின் தீவிரத்தின் அடிப்படையில் கல்வித்துறை விசாரணைக்கு முன்னதாகவே காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கலாம். அதேநேரம் கல்வி நிலையங்களில் ஏற்படும் மரண சம்பவங்கள் குறித்து கல்வித்துறை அலுவலர்களும் விசாரணை நடத்தலாம்” என உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: பரங்கிமலை மாணவி கொலை.. சிசிடிவி ஆதாரங்களை திரட்டும் போலீசார்...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.