ETV Bharat / state

TNPSC Group 1: குரூப்-1 முதன்மைத் தேர்வு எழுத சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய அவகாசம் நீட்டிப்பு! - chennai news

குருப் 1 பணிக்கான முதன்மைத் தேர்விற்கு தகுதிபெற்றவர்கள் தங்களின் சான்றிதழ்களை ஜூலை 21-ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும், அவ்வாறு பதிவேற்றம் செய்யாதவர்களின் விண்ணப்பம் முழுவதுமாக நிராகரிக்கப்படும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
author img

By

Published : Jul 7, 2023, 6:36 PM IST

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 1 ( TNPSC Group 1) பதவிகளில் அடங்கிய துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர், உள்ளிட்ட 92 காலி பணியிடங்களுக்கான தேர்வை 2022 நவம்பர் 19-ஆம் தேதி நடத்தியது. முதல் நிலைத் தேர்வினை மூன்று லட்சத்திற்கும் அதிகமானோர் எழுதினர்.

இதன் முடிவுகள் கடந்த ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியிடப்பட்டது. மேலும் முதன்மைத் தேர்வு ஆகஸ்ட் 10-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரையில் எழுதுவதற்கு ஒரு பணியிடத்திற்கு 20 பேர் வீதம் அழைக்கப்பட்டுள்ளனர். முதன்மைத் தேர்வு எழுதவுள்ள நபர்கள் தங்களின் சான்றிதழ் சரிபார்ப்பிற்கான ஆவணங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தது.

இதனையடுத்து, குரூப் 1 தேர்வு முதல் நிலைத் தேர்வில் வெற்றி பெற்ற தேர்வர்கள் மே 8-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை தங்களுடைய அசல் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து தேர்வாணைய இணையதளத்தில் அரசு இ-சேவை மையங்கள் மூலமாக பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும். மேலும் முதன்மை எழுத்துத் தேர்விற்கு தேர்வுக் கட்டண விலக்குப் பெறாத தேர்வர்கள் முதன்மைத் தேர்வுக்குரிய தேர்வுக் கட்டணமாக 200 ரூபாய் 15ஆம் தேதிக்குள் செலுத்தப்பட வேண்டும் என்றும்.

தேர்வுக் கட்டணத்தை செலுத்திய பின்னரே ஆவணங்களைப் பதிவேற்றம் செய்ய முடியும், தேர்வர்கள் தங்களின் அசல் சான்றிதழ்களை குறிப்பிட்ட தேதிகளுக்குள் பதிவேற்றம் செய்யப்படவில்லை என்றால், அவர்கள் முதன்மைத் தேர்வு எழுத அனுமதி அளிக்கப்படமாட்டார்கள் எனவும், முதன்மைத் தேர்வில் கலந்து கொள்ள விரும்பவில்லை எனக் கருதி விண்ணப்பம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படமாட்டாது என, அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் அஜய்யாதவ் கடந்த மே மாதம் அறிவித்திருந்தார்.

தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலரின் ஆணை
தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலரின் ஆணை

ஆனால் சில தேர்வர்கள் தங்களின் சான்றிதழ்களை சரியாக பதிவேற்றம் செய்யாமல் உள்ளதால் மீண்டும் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் அஜய்யாதவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கான தேர்வு - 1 (குருப்- 1) இல் அடங்கிய பதவிகளுக்கான காலிப்பணியிடங்களில், நேரடி நியமனம் செய்வதற்கு விண்ணப்பதாரர்களால் பதிவேற்றம் செய்யப்பட்ட சான்றிதழ்கள் சரிபார்ப்புக்கு பின்னர் சில சான்றிதழ்கள் முழுமையாக பதிவேற்றம் செய்யப்படாமல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

எனவே, இத்தகைய விண்ணப்பதாரர்கள் 21.7.2023 அன்று மாலை 5.45 மணிக்குள் விடுபட்ட மற்றும் முழுமையான சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய இறுதி வாய்ப்பு வழங்கப்படுகிறது. இத்தகவல் அவ்விண்ணப்பதாரர்களுக்கு குறுஞ்செய்தி, மின்னஞ்சல் மற்றும் குறிப்பாணை TNPSC மூலமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், அவ்விண்ணப்பதாரர்கள் அனைவரும் குறிப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ள சான்றிதழ்களை தேர்வாணைய இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள, இ-சேவை மையங்கள் மூலமாக பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்படுகின்றனர். அவ்வாறு தவறும் பட்சத்தில், அத்தகைய விண்ணப்பதாரர்களின் விண்ணப்பம் முழுவதுமாக நிராகரிக்கப்படும் என அதில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: Mekedatu: கர்நாடக பட்ஜெட்டில் மேகதாது அணை அறிவிப்பு; கலக்கத்தில் தமிழக விவசாயிகள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.