ETV Bharat / state

போக்குவரத்து தலைமை காவலரை பாராட்டி பரிசளித்த கலெக்டர் மகள் - போக்குவரத்து தலைமை காவலரை பாராட்டி பரிசளித்த கலெக்டர் மகள்

போக்குவரத்து தலைமை காவலரின் சிறப்பான பணியை பாராட்டி ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரின் மகள் டைரி பரிசளித்துள்ளார்.

காவலருக்கு டைரி பரிசளித்த கலெக்டர் மகள்
காவலருக்கு டைரி பரிசளித்த கலெக்டர் மகள்
author img

By

Published : Mar 25, 2022, 2:34 PM IST

சென்னை: நந்தம்பாக்கம் அடுத்த மணப்பாக்கம் சந்திப்பில் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு வருபவர் தலைமை காவலர் சாலமன் சதீஷ் (44). இப்பகுதியில் 'பீக் ஹவர்ஸ்' எனப்படும் நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இதனால் அப்பகுதியில் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் உள்ளிட்டோர் போக்குவரத்து நெரிசலில் சிக்கி பெரும் சிரமத்திற்குள்ளாவது வழக்கம்.

சிக்கலான நேரத்திலும் கூட போக்குவரத்து தலைமை காவலர் சாலமன் சதீஷ் மிகவும் சுறுசுறுப்பாக தனது பணியை செய்து வந்துள்ளார். இதனை சென்னையில் வசிக்கும் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சிரியர் பாஸ்கரபாண்டியனின் மகள் மோனா மிர்தண்யா (6) தினந்தோறும் பள்ளிக்கு சென்று வரும் போது பார்த்துள்ளார். இதையடுத்து தலைமை காவலர் சாலமன் சதீஷின் பணியை பாராட்டி மோனா மிர்தண்யா டைரி பரிசளித்துள்ளார்.

காவலருக்கு டைரி பரிசளித்த கலெக்டர் மகள்

இதுகுறித்து மோனா மிர்தண்யா கூறுகையில், "நான் பள்ளிக்கு போகும் போதும் வரும் போதும் போக்குவரத்து போலீஸ் அங்கிளை பார்ப்பேன். அவங்களுக்கு டைரி கிப்ட் கொடுத்தேன். அவங்க எல்லா டிராஃபிக் போலீஸ் அங்கிள் மாதிரி உட்கார்ந்து இருக்க மாட்டாங்க, ஹானஸ்டா அவங்க டியூட்டிய பார்ப்பாங்க" எனக் கூறியுள்ளார்.

போக்குவரத்து தலைமை காவலர் சாலமன் சதீஷ், "திடீரென ஒரு கார் வந்து நின்றது. குழந்தை இறங்கி வந்து அங்கிள் உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும். நல்லா டியூட்டி பாக்குறீங்க என்று கூறி டைரி ஒன்றை வழங்கியது. இது எனக்கு மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் கொடுத்தது" என்றார்.

இதையும் படிங்க: ‘செஞ்சிருவேன்’ மாரி பட டயலாக்கை எஸ்ஐ-க்கு டெடிகேட் செய்த இளைஞர்

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.