போரில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த இந்திய ராணுவ வீரர்களின் மனைவிகள், அவர்களுடைய குடும்பங்களின் எதிர்கால நலனைக் கருத்தில்கொண்டு 1966ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் தேதி ராணுவ அலுவலர்களின் மனைவிகள் நலச்சங்கம் தோற்றுவிக்கப்பட்டது (Army Wives Welfare Association).
சங்கம் தோற்றுவிக்கப்பட்ட தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்படும். அந்த வகையில், 54ஆம் ஆண்டு தினம் நாடு முழுவதும் நேற்று (ஆகஸ்ட் 23) கொண்டாடப்பட்டது. தமிழ்நாட்டில் சென்னையில் அமைந்துள்ள தக்ஷன் பாரத் (டிபி) பகுதியில் இவ்விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு தலைமையேற்ற டிபி மண்டல தலைவர் டாக்டர் எலிசபெத் ராவ், இரண்டாம் உலகப் போரில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் மனைவிகளுக்கு (வீர் நரிஸ்) தலா 10 ஆயிரம் ரூபாய் வழங்கி கௌரவித்தார்.
மேலும் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குழந்தைகளின் கல்விக்கு உதவிய பெண்களுக்கும், கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் முகக் கவசங்கள் தயாரித்த பெண்களுக்கும் AWWA-வின் சிறப்பு விருதுகளையும் அவர் வழங்கினார். இதையடுத்து, ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளைச் சேர்ந்த புத்தங்களை உள்ளடக்கிய டிஜிட்டல் நூலகத்தையும் எலிசபெத் தொடங்கிவைத்தார். தக்ஷன் பாரத் (டிபி) பகுதி என்பது இந்திய ராணுவத்தின் தென்னிந்திய பிரிவாகும். இதன் தலைமையகம் சென்னையில் இயங்கிவருகிறது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் இன்று 5,975 பேருக்கு கரோனா தொற்று!