சென்னை கொடுங்கையூர் எம்.ஜி.ஆர் நகர் அண்ணா சாலையில் உணவகம் நடத்தி வருபவர், சீதாலட்சுமி. இவரது கடைக்கு அருகே கறிக்கடை நடத்தி வருபவர், ஜினத்பானு. இதனிடையே, இன்று (ஏப்ரல்.18) அதிகாலை டிபன் கடை திடீரென தீப்பிடித்து மளமளவென எரிந்து கொண்டிருந்தது. மேலும் அருகிலிருந்த கறிக்கடையிலும் தீயானது பரவி கொழுந்துவிட்டு எரிந்தது.
இதனைக்கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக கொருக்குப்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர். இதனையடுத்து, தகவலின் பேரில் தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்தனர். வந்த அரை மணி நேரத்தில் தீயை அணைத்தனர். இந்த தீவிபத்தின் போது கடை மூடியிருந்ததால் யாருக்கும் எந்த வித காயமும் ஏற்படவில்லை.
ஆனால், டிபன் கடையிலிருந்த சமையல் பாத்திரம், அடுப்பு, கறிக்கடையில் இருந்த பிரிட்ஜ், டிவி, எடை மிஷின் போன்ற பொருட்கள் எரிந்து சாம்பலானது. இந்த தீவிபத்து குறித்து கொடுங்கையூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சிலிண்டர் வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: நடுவானத்தில் தீ - செல்ஃபோன் செய்த சம்பவம்; பயணிகளின் நிலை?