ETV Bharat / state

மாண்டஸ் புயல்; முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக பூங்கா மற்றும் மைதானங்கள் மூடல்

தமிழ்நாட்டை ஒட்டியுள்ள வங்கக்கடல் பகுதியில் மையம் கொண்டுள்ள மாண்டஸ் புயல் காரணமாக சென்னை மாநகராட்சி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

Etv Bharatமாண்டஸ் புயல்; முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக பூங்கா மற்றும் மைதானங்கள் மூடல்

author img

By

Published : Dec 9, 2022, 9:38 AM IST

சென்னை: வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள மாண்டஸ் புயல் இன்று (டிச.9) நள்ளிரவு ஸ்ரீஹரிகோட்டா-புதுச்சேரி இடையே மாமல்லபுரத்தில் கரையைக் கடக்க இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இன்று தீவிரமடையும் புயல் காரணமாக சென்னை மாநகராட்சி நகரம் முழுவதும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. அதில் முதன்மையாக பூங்காக்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களை பூட்டி வைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்திய சென்னை மாநகராட்சி ஆணையர் கூறுகையில், ‘மக்கள் கடற்கரை மற்றும் தேவையில்லாமல் வெளியே செல்ல வேண்டாம் என மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மரங்களுக்கு அடியில் கார்களை நிறுத்த வேண்டாம்’ எனவும் கூறப்பட்டுள்ளது எனக் கூறினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய புதுச்சேரி கல்வி அமைச்சர் நமச்சிவாயம் கூறுகையில், ‘இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று (டிச.9) புயல் தீவிரமடையும் என தெரிவித்ததையடுத்து புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது’ எனக் கூறினார்.

மாண்டஸ் புயல் மேற்கு-வடமேற்குத்திசையில் நகர்ந்து வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரையில் புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே 65-75 கி.மீ. வேகத்தில் இன்று (டிச.8) நள்ளிரவு கரையைக் கடக்க இருப்பதாக என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது. இதற்கிடையில் புயல் எச்சரிக்கை காரணமாக கடற்கரையில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. அதே நேரத்தில் பாதுகாப்பிற்காக மீன்பிடிப் படகுகள் கடற்கரையிலிருந்து வெகு தொலைவில் நிறுத்தப்பட்டுள்ளன.

கடற்கரையோரத்தில் ஆம்புலன்ஸ்களும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. தென்மேற்கு வங்க கடலோர மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த மாநில நிர்வாகம் சார்பில் உள்ளூர் அச்சு, தொலைக்காட்சி மற்றும் மின்னணு ஊடகங்கள் மூலம் மாநில பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் ஆலோசனைகளை வழங்க கோரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாட்டில் இன்று 13 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஆறு தேசிய பேரிடர் மீட்புப் படை (என்டிஆர்எஃப்) குழுக்கள் தயார் நிலையில் உள்ளன.

இதையும் படிங்க:தீவிரமடையும் மாண்டஸ் புயல்: தமிழ்நாட்டில் 31 மாவட்ட பள்ளிகளுக்கு லீவ்.. 3 மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.