ETV Bharat / state

'சி.வி.சண்முகத்தை லுங்கியுடன் அழைத்துச்செல்லும் சூழல் வரும்..!' - புகழேந்தி - புகழேந்தி

சி.வி.சண்முகம் பேசும்போது தன்மையோடு பேச வேண்டும்; இல்லை என்றால் அவரை லுங்கியுடன் அழைத்துச்செல்ல வேண்டிய சூழல் வரும் என ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

’சி.வி.சண்முகத்தை லுங்கியுடன் அழைத்துச் செல்லும் சூழல் வரும்..!’- புகழேந்தி

author img

By

Published : Sep 5, 2022, 10:31 PM IST

சென்னை: மயிலாப்பூரில் உள்ள தனியார் ஹோட்டலில் செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான புகழேந்தி, "சி.வி.சண்முகம் இரண்டு நாட்களுக்கு முன்பாக காவல் துறையை மிக அநாகரிகமாகப் பேசியுள்ளார். காவல் துறை கோபாலபுரத்தில் மாவாட்டிக் கொண்டிருக்கிறதா? என்கிறார். சி.வி. சண்முகம் போன்றவர்களுக்கு திடீரென ஜானகி அம்மாள் நியாபகம் வந்துள்ளது. நாளை(செப்.6) மேல்முறையிட்டு வழக்கு தாக்கல் செய்யப்படும். பூலித்தேவன் நிகழ்வில் மக்கள் ஓ.பன்னீர்செல்வம் பக்கம் இருக்கிறார்கள் என்பது நிரூபணம் ஆகிவிட்டது.

சி.வி.சண்முகம் பேசும்போது தன்மையோடு பேசவேண்டும் இல்லை என்றால், அவரை லுங்கியுடன் அழைத்துச்செல்ல வேண்டிய சூழல் வரும். இணை ஒருங்கிணைப்பாளர் பதவியில் நான் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதனால் அவர் தற்போது பதவியில் இல்லை. ஓ.பன்னீர்செல்வம் மட்டும் தான் ஒருங்கிணைப்பாளராக உள்ளார். நீதிமன்றத் தீர்ப்பில் இந்தப் பிரச்னையின் பிரதான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், தற்போது வந்த தீர்ப்பு ஓ.பன்னீர்செல்வத்துக்கு சாதகமாகத்தான் வந்துள்ளது.

ஒருவேளை சின்னம் மற்றும் கட்சி முடக்கப்பட்டால் அதனை மக்கள் ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள். எடப்பாடி பழனிசாமி இப்போது வந்தாலும் ஓ.பன்னீர்செல்வம் ஏற்றுக்கொள்ளத் தயார். ஓ.பன்னீர்செல்வத்துக்கு வருவது தானா சேர்ந்த கூட்டம். எடப்பாடி பழனிசாமி பணம் கொடுத்துக் கூட்டத்தைச் சேர்க்கிறார்.

அதிமுக அலுவலகத்தில் நடந்த கலவரம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடைபெற்று வருகிறது. விரைவில் நிறைய வீடியோ ஆதாரங்கள் வெளிவரும். சி.வி.சண்முகம் கொடுத்த புகார் நிரூபிக்கப்படவில்லை என்றால் சட்டம் அவர் மீதுதான் பாயும். முன்னாள் சட்டத்துறை அமைச்சர் தமிழ்நாடு டிஜிபியை மாவாட்டுகிறார் எனக்கூறியதை தமிழ்நாடு முதலமைச்சர் கேட்டு அமைதியாக இருப்பது வேதனையாக உள்ளது.

அதிமுக மீண்டும் எழுந்து நடக்க வேண்டும் எனும் நோக்கத்தோடு தான் ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமியை அழைத்திருக்கிறார். அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் மது அருந்தியது யார்?, குத்தாட்டம் போட்டது யார் ?, என்பது சிபிசிஐடி விசாரணையில் தெரியவரும்.

'சி.வி.சண்முகத்தை லுங்கியுடன் அழைத்துச்செல்லும் சூழல் வரும்..!' - புகழேந்தி

கொள்ளையடித்து விட்டோம் என்று சொல்கிறார்கள், கட்சி அலுவலகத்துக்குள் டாஸ்மாக் பாட்டில்களாகக் கிடக்கிறது. அதிமுக பொதுக்குழு செல்லும் என்கிற இரு நீதிபதி தீர்ப்பை எதிர்த்து நாளை மேல்முறையீடு செய்ய வாய்ப்பு உள்ளது. டாஸ்மாக் சிவி சண்முகத்திற்கு எதுவும் புரியாது" எனக் கூறினார்.

இதையும் படிங்க:'அடுத்த நான்காண்டுகளில் ஒவ்வொரு பள்ளிகளிலும் ஸ்மார்ட் வகுப்பறைகள்..!' - முதலமைச்சர் ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.