இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கரோனா நோய்த் தொற்று பரவாமல் தடுத்து நிறுத்துவதற்காக அறிவிக்கப்பட்ட இரண்டாவது ஊரடங்கு காலம், மே 3ஆம் தேதியோடு முடிவடைகின்ற நிலையில், மேலும் இந்த ஊரடங்கு நீட்டிக்கப்படுமா, நீக்கப்படுமா அல்லது படிப்படியாகத் தளர்த்தப்படுமா என்ற எதிர்பார்ப்பும் குழப்பமும் மக்கள் மனதில் நிலவுகிறது.
இந்நிலையில் மீண்டும் ஊரடங்கை நீட்டிப்பது அல்லது தளர்த்துவது குறித்து கடைசி நேரத்தில் அறிவித்து பதற்றத்தை அதிகரித்திடாமல், தக்க முடிவெடுத்து முன்கூட்டியே அறிவித்தால், பொதுமக்களிடம் தேவையற்ற குழப்பத்தையும், பதற்றத்தையும் பெருமளவுக்குத் தவிர்க்க முடியும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இரண்டு காவலர்களுக்கு கரோனா இல்லை - பரிசோதனை முடிவுகள் தவறு!