சென்னை: தமிழ்நாட்டில் தற்போது பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், பெரும்பாலான மாவட்டங்களில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது.
கரோனா பாதிப்பு
அரசு அறிவித்துள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஆகஸ்ட் 9 ஆம் தேதி காலை 6 மணியுடன் முடிவடைகிறது.
முதலமைச்சர் ஆலோசனை
மீண்டும் தொற்றின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 6) நண்பகல் 12.30 மணிக்கு மருத்துவ வல்லுநர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்களோடு அதனைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டார்.
இந்நிலையில், இன்று மாலை மறு அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.
இதில் திரையரங்குகள், நட்சத்திர விடுதியில் இயங்கும் மதுக்கூடங்கள் ஆகியவை இயங்க அனுமதி அளிப்பது குறித்து அறிவிப்பு வரலாம் என கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு
தற்போது தமிழ்நாட்டில் கரோனா தொற்று தினசரி பாதிப்பு 2,000-க்கும் குறைவாக உள்ளது.
ஆனாலும், சென்னை, செங்கல்பட்டு, கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் கரோனா பாதிப்பு மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறதோ என்ற அச்சம் பொதுமக்களிடம் எழுந்துள்ளது.
திரையரங்குகள் மூடல்
தற்போது வரை பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகள், மெரினா கடற்கரை உள்ளிட்ட இடங்களை திறப்பதற்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை.
முக்கிய கோயில்களிலும் தரிசனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஊரடங்கு நீட்டிப்பு? - ஆலோசிக்கும் முதலமைச்சர்