ETV Bharat / state

கடலூர், ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரியின் கட்டணத்தை குறைக்கக்கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் - Medical College students protest to reduce the fee

கடலூர், ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரிகளின் கல்விக் கட்டணத்தை குறைக்கக் கோரி சென்னையில் மருத்துவ மாணவர்கள், அவரது பெற்றோர்கள் என 200க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

Medical College students protest to reduce the fee
கடலூர் ,ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரியின் கட்டணத்தை குறைக்கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
author img

By

Published : Nov 29, 2020, 4:19 PM IST

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் சட்டம் இயற்றப்பட்டு, 2013ஆம் ஆண்டு முதல் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தை அரசு ஏற்று நடத்தி வருகிறது. அந்தப்பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில்தான் இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியும், பல் மருத்துவக் கல்லூரியும் இயங்கி வருகின்றன. மருத்துவக் கல்வி இயக்குநரகம் மூலம் ஒற்றைச் சாளர முறையில் மாணவர் சேர்க்கையும் கடந்த 2013ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது.

இந்தாண்டு முதல் அக்கல்லூரி கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி என்ற பெயரில் செயல்படத் தொடங்கியுள்ளது. ஆனால், அக்கல்லூரியின் கல்விக் கட்டணம் ஏற்கனவே இருந்த அளவான ரூ 5.44 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டு வசூல் செய்யப்படுகிறது. நடப்பாண்டு கல்வி கட்டணம் ரூ. 4 லட்சம் என அரசு மாணவர் சேர்க்கை குறிப்பேட்டில் வெளியிட்ட நிலையில், அதனை ரூ. 5.44 லட்சமாக அதிகரித்து நவம்பர் 12ஆம் தேதி அரசு மீண்டும் அறிவித்தது.

Medical College students protest to reduce the fee
கல்லூரியின் கட்டணத்தை குறைக்கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

கட்டணம் செலுத்துவதற்கான இறுதி நாளாக நவம்பர் 30ஆம் தேதியை நிர்ணயித்துள்ளது. அதேபோல், ஈரோடு மாவட்டம், ஐஆர்டி பெருந்துறை மருத்துவக் கல்லூரியையும் அரசே ஏற்று நடத்தி வருகிறது. தற்பொழுது அது, ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரியாக செயல்படுகிறது. அந்தக் கல்லூரிக்கான கட்டணமாக ரூ 3.85 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இக்கட்டணத்தை செலுத்த முடியாமல் பெற்றோர்கள் சிரமப்படுகின்றனர்.

"ஐஆர்டி பெருந்துதுறை மருத்துவக் கல்லூரியையும், ராஜா முத்தையா பல் மருத்துவக் கல்லூரியையும் அரசே ஏற்ற பிறகு, அவை அரசு மருத்துவக் கல்லூரிகளாக செயல்படுகின்றன. இதர அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தைத்தான் இக்கல்லூரிகளிலும் அரசு வசூல் செய்ய வேண்டும். அதை விடுத்து, தனியார் மருத்துவக் கல்லூரிகளை விட கூடுதலான கட்டணத்தை வசூல் செய்வது நியாயமல்ல. எனவே , இதர அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கான கல்விக் கட்டணமான ரூ,13,670யை, இந்த இரு அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கும் நிர்ணயிக்க வேண்டும்.

கடலூர் அரசு பல் மருத்துவக் கல்லூரிக்கு (இராஜா முத்தையா பல் மருத்துவக் கல்லூரி) , அரசு பல் மருத்துவக் கல்லூரியின் கட்டணமான ரூ 11,610யை மட்டுமே கட்டணமாக நிர்ணயிக்க வேண்டும். இக்கல்லூரிகளில் பயிலும் முதுநிலை மருத்துவம், முதுநிலை பல் மருத்துவம் பயிலும் மாணவர்களின் கல்விக் கட்டணத்தையும் , இதர அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு இணையாக குறைக்க வேண்டும்.

கட்டணத்தை கட்டாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மிரட்டும் போக்கை இக்கல்லூரிகளின் நிர்வாகங்கள் உடனடியாக கைவிட வேண்டும். தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கட்டணங்கள் மிக அதிகமாக உள்ளது. அவற்றை சரிபாதியாகக் குறைக்க வேண்டும்" என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மாவட்ட ஆட்சியரகம் அருகில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று(நவம்பர் 29) நடைபெற்றது.

இதில் சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர் என். வெங்கடேஷ், மாநில செயலாளர் ஏ.ஆர். சாந்தி , பொதுச் செயலாளர் ஜி.ஆர். ரவீந்திரநாத், மருத்துவ மாணவர்கள், அவரது பெற்றோர்கள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: ராஜா முத்தையா, பெருந்துறை மருத்துவக் கல்லூரிகளில் அதிக கட்டணம் - மருத்துவர்கள் சங்கம் கண்டனம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.