சென்னை தாம்பரம் மார்க்கெட் பகுதியில் 500க்கும் மேற்பட்ட மக்கள், முகக்கவசம் அணியாமல், தகுந்த இடைவெளி கடைபிடிக்காமல் கூட்டமாக பொருள்களை வாங்கிச் சென்றுவருகின்றனர்.
நாளை மூன்றாவது ஆடி வெள்ளிக்கிழமை வரலட்சுமி நோன்பிற்கான பூஜை பொருள்கள் வாங்குவதற்காக மார்க்கெட்டில் அதிகளவு மக்கள் கூட்டம் உள்ளதாகத் தெரிகிறது. இதனால் தாம்பரம் பகுதியில் கரோனா நோய்த்தொற்று பாதிப்பு அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும் தாம்பரம் காவல்துறையினர், அவ்வப்போது ஒலிபெருக்கி மூலம் எச்சரித்து கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த இயலவில்லை.மக்கள் பொருள்களை வாங்கிச் செல்லும் நோக்கத்தில் மட்டுமே கவனம் செலுத்தினர்.