அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டது. அதனடிப்படையில் திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்ட அம்பத்தூர், ஆவடி, கும்மிடிப்பூண்டி ஆகிய பகுதிகளிலிருந்து தேர்வு ஆகிய மொத்தம் 23 மாணவர்களுக்கு அரசு சார்பில் மருத்துவ உபகரணம் வழங்கி நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் கலந்துகொண்டு மருத்துவப் படிப்பில் தேர்வாகிய 23 மாணவர்களுக்கு மருத்துவ உபகரணங்களை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் பாண்டியராஜன் பேசுகையில், "உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரைக்கு காசு கொடுத்து கூட்டத்தை கூட்டி கரோனாவை இலவசமாக வழங்குகிறார்.
உதயநிதி மக்களிடையே கரோனாவை பரப்பாமல் இருக்க வேண்டும். ஸ்டாலின் திருநீற்றை அவமதித்ததால் கெட்டப்பெயர் வந்தது. அதனை சமாளிக்க ஆதீனத்தை சந்தித்துள்ளார் உதயநிதி. ஆதீனம் வழங்கிய புத்தகத்தை உதயநிதி படிக்கவேண்டும் அதன் வழி நடக்க வேண்டும். பாஜக-அதிமுக இடையேயான தொகுதி பங்கீடு குறித்து வரும் கருத்துகளில் உண்மை இல்லை.
இரண்டு கட்சிகள் கூட்டணிக்கு வர உள்ளன. வாரிசு அரசியல் இல்லாமல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் வந்துள்ளனர். எழுவர் விடுதலையில் ஆளுநர் விரைவாக முடிவெடுக்க வேண்டும். உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாடு வந்தபோது திட்டங்கள் சார்ந்த கோரிக்கை வைக்கப்பட்டது" என்றார்.
இதையும் படிங்க: ஆண்ட கட்சி என்ற பெருமையை அதிமுக பெறும் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி