சென்னை வேளச்சேரி பகுதியில் உள்ள வீடுகளில் கொள்ளை அடிப்பவர்களை குற்றப்பிரிவு ஆய்வாளர் கமலக்கண்ணன் தலைமையில் தனிப்படை அமைத்து தேடிவந்தது
வேளச்சேரியில் வாகன சோதனையின்போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் சந்தேகம் அடைந்த போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.
விசாரணையில் திருவண்ணாமலையைச் சேர்ந்த கமலக்கண்ணன்(28) பெங்களூரைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி(32) என இவர்கள் சென்னையில் உள்ள பல வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
கமலக்கண்ணன் மீது காவல் நிலையங்களில் சுமார் 20க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது எனவும். தட்சிணாமூர்த்தி சினிமாவில் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.
இவர்கள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த வேளச்சேரி குற்றவியல் காவல்துறை ஆய்வாளர் அவர்களிடமிருந்த கொள்ளை அடிக்கப்பட்ட 90 சவரன் நகைகளை பறிமுதல் செய்து இருவரையும் சிறையில் அடைத்தனர்.