கடந்த 15ஆம் தேதி நுங்கம்பாக்கம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட வள்ளுவர் கோட்டம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை மீது உயர்நீதிமன்ற கண்காணிப்புடன் கூடிய சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை தேவை என வலியுறுத்தியது.
அன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் காவல்துறையைத் தரக்குறைவாகப் பேசியதாக வி.சி.க கட்சியைச் சேர்ந்த உஷாராணி, தொழிலாளர் விடுதலை முன்னணியைச் சேர்ந்த தலித் மலர் ஆகியோர் மீது காவல்துறை உதவி ஆய்வாளர் வினோத்குமார் என்பவர் அளித்த புகாரின் பேரில் F-3 P.S Cr.No 453/19 u/s 153, 505 (1)(a) (c) IPC பிரிவுகளஇல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இதுவரை எந்த கைது நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.